Don't Miss!
- News
ப.சிதம்பரம் திகார் சிறைக்கு செல்ல வாய்ப்பு! கார்த்தி சிதம்பரத்திற்கு ஆபத்தில்லை..! ஹெச்.ராஜா அதிரடி!
- Sports
ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை.. ராகுல் திரிபாதி மரண பேட்டிங்.. ஒரே ஓவரில் ஆட்டத்தை மாற்றிய மும்பை
- Finance
இந்தியாவை விட இலங்கை, பாகிஸ்தான், வங்க தேசத்தில் பெட்ரோல் விலை குறைவு.. ஆய்வறிக்கை வெளியீடு!
- Automobiles
இதை யாரும் எதிர்பாக்கவே இல்ல... ஹூண்டாய் நிறுவனத்தை பாக்கவே பாவமா இருக்கு... என்ன ஆச்சு தெரியுமா?
- Technology
ரூ.20,000 விலைப்பிரிவு: அறிமுகமான ஒன்பிளஸ் ஏஸ் ரேசிங் பதிப்பு- 12 ஜிபி ரேம், 67வாட்ஸ் சூப்பர் ஃப்ளாஷ் சார்ஜிங்
- Lifestyle
மேங்கோ கிரனிட்டா
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
தளபதி 66 எப்போ சார் ஆரம்பிப்பிங்க...டைரக்டர் வெளியிட்ட அசத்தல் அப்டேட்
ஐதராபாத் : விஜய்யின் அடுத்த படமான தளபதி 66 படத்தை தெலுங்கு முன்னணி டைரக்டர் வம்சி இயக்க போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராக உள்ள இந்த படத்தை தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் தில் ராஜு ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தயாரிக்க உள்ளார்.
இந்த படத்தில் பிரகாஷ் ராஜ் முக்கிய கேரக்டரில் நடிப்பதாகவும், விஜய்யின் மகளாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே போல் ஹீரோயினாக கியாரா அத்வானி நடிப்பது கிட்டதட்ட உறுதியாகி விட்டதாக கூறப்படுகிறது.
தளபதி
66...
விஜய்யுடன்
ஜோடி
சேர
போவது
இவர்
தானா
?

அப்டேட் கேட்கும் ரசிகர்கள்
தளபதி 66 பற்றிய அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதங்களுக்கு மேல் ஆகி விட்டது. ஆனால் இதுவரை வேறு எந்த அதிகாரப்பூர்வ அப்டேட்டோ, படத்தின் ஷுட்டிங்கை எப்போது துவக்க போகிறார்கள் என்ற தகவலையோ வெளியிடவில்லை. இதனால் ரசிகர்கள் தளபதி 66 அப்டேட் கேட்க துவங்கி விட்டனர்.

டைட்டில் தேடும் டைரக்டர்
ஆனால் தளபதி 66 படத்தின் வேலைகளை ஏற்கனவே துவக்கி விட்டாராம் டைரக்டர் வம்சி. கார்த்தி - நாகர்ஜுனா நடித்த தோழா படத்திற்கு பிறகு தமிழில் வம்சி இயக்க போகும் படம் என்பதால் டைட்டில் என்ன வைக்கலாம் என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறாராம். மாஸான டைட்டில்களை யோசித்து வருகிறாராம்.

டைரக்டர் தந்த தகவல்
இந்நிலையில் தளபதி 66 பற்றி எதிர்பார்ப்பு அதிகரித்து வருவதால் ரசிகர்களுக்காக மிகப் பெரிய அப்டேட் ஒன்றை வம்சியே வெளியிட்டுள்ளார். அது பற்றி வம்சி கூறுகையில், எனது மிகப் பெரிய பலமே உறவுகள் மற்றும் உணர்வுகளை அதிகம் காட்டுவது தான். இந்த இரண்டு அம்சங்களையும் விஜய் காட்டுவதாக படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. விஜய் சாரின் மாஸ் மற்றும் ரசிகர்கள் அவரிடம் இருந்து எதிர்பார்ப்பது ஆகியவற்றை மனதில் வைத்து தான் இந்த கதையை நான் உருவாக்கி உள்ளேன் என்றார்.

அப்டேட் எப்போ வரும்
படக்குழு பற்றி அப்டேட் கேட்டதற்கு, நீங்கள் எதிர்பார்க்கும் அனைத்து அப்டேட்களும் டிசம்பர் மாதம் முதல் வரும். கதையை ஃபைனல் செய்து வருகிறோம். அதனால் இந்த ஆண்டு இறுதி முதல் அதிகமான அப்டேட்களை நீங்கள் எதிர்பார்க்கலாம் என்றார். விஜய்யின் எளிமையை பாராட்டிய வம்சி, இந்த கதை விஜய்க்கு மிகவும் பிடித்திருந்ததாக தெரிவித்தார்.

எளிமையான விஜய்
தொடர்ந்து அவர் பேசுகையில், தமிழ் சினிமாவில் அவர் மிகப் பெரிய உயரத்தை எட்டி பிடித்து விட்டார். ஆனால் இப்போதும் மிக எளிமையாக, தன்மையாக இருக்கிறார். அதனால் அவருடன் பணியாற்றுவது எனக்கு மிக கம்ஃபர்டபிளாக இருக்கும் என நினைக்கிறேன் என்றார்.

பீஸ்ட் முடித்த பிறகு தான்
விஜய் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கும் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இதுவும் பேன் இந்தியன் படம் தான். பூஜா ஹெக்டே லீட் ரோலில் நடிக்கிறார். செல்வராகவன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் வேலைகள் கிட்டதட்ட முடியும் நிலையை எட்ட போவதாக கூறப்படுகிறது. இதனால் பீஸ்ட் படத்தின் ஷுட்டிங்கை முடித்த பிறகு தளபதி 66 ஷுட்டிங்கை விஜய் துவக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.