twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெயம் ரவி குடும்பத்தின் டார்ச்சர் - ஆடியோ விழாவில் அம்பலமாக்கிய இயக்குநர்

    By Shankar
    |

    சென்னை: ஒரு படம் எடுக்க கதை சொல்லப் போனால் ஜெயம் ரவி குடும்பத்தினர் எப்படியெல்லாம் இயக்குநர்களைப் படுத்துகிறார்கள் என்பதை இயக்குநர் கரு பழனியப்பன் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்.

    இன்று நடந்த சமுத்திரக்கனியின் நிமிர்ந்து நில் பட இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசுகையில், "நண்பன், புத்தகம், மது ஆகிய மூன்றிலும் பழையதுதான் எபோதுமே ருசி மிகுந்தது. சினிமாவில் எனக்கு நண்பர்கள் குறைவு. ஆனால் நான் சினிமாவிற்கு வந்ததிலிருந்து எனக்கு நண்பனாக இருப்பவன் சமுத்திரக்கனி.

    ஜெயம் ரவியிடம் இந்த கதையை பற்றி பேசிவிட்டு வந்ததும் சமுத்திரக்கனி என்னிடம் 'ரவி அப்பா மோகன் ஒரு திருத்தம் சொல்கிறார். ரவி அண்ணன் ராஜா ஒரு திருத்தம் சொல்கிறார். ரவி ஒரு திருத்தம் சொல்கிறார். எனக்கென்னமோ இந்த வண்டி கிளம்பாது என்று தோன்றுகிறது' என்றார்.

    Director reveals the torture of Jayam Ravi family

    அதற்கு நான் சொன்னேன் 'பேசாமல் அவர்கள் மூவரையும் ஒன்றாக உட்கார வைத்து பேசிவிட்டால் பிரச்சனை முடிந்துவிடும் என்று சொன்னதற்கு, இந்த படத்தை துவங்குவதை விட அவர்கள் மூவரையும் ஒன்றாக உட்கார வைப்பதுதான் கஷ்டம், படத்தை துவங்க ஐடியா கேட்டால் நீ படத்தை முடிக்க ஐடியா கொடுக்கிறாயே' என்றார்.

    ஜெயம் ரவி சூப்பர் ஸ்டார் மாதிரியும், அமலாபால் அமலா மாதிரியும், சமுத்திரக்கனி ஷங்கர் மாதிரியும் வரவேண்டும் என வாழ்த்துவதைவிட, சமுத்திரக்கனி அவனாகவே புகழ் பெற வேண்டும் என வாழ்த்தலாம்," என்றார்.

    English summary
    Director Karu Pazhaniyappan revealed the tortures of Jayam Ravi family for a director who ants to direct Jayam Ravi.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X