RJ Balaji: இந்திய அளவுல ரஜினி, கமல் எல்லாம் டாப் நடிகர்கள் இல்லை.. ஆர்ஜே பாலாஜி பாராட்டிய நடிகை!
சென்னை: நடிகர் ஆர்ஜே பாலாஜியின் நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படம் நாளைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. முற்றிலும் சிறைச்சாலைகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் அமைந்துள்ள நிலையில், உண்மை நிகழ்வுகளை கூறும் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஆர்ஜே பாலாஜி, செல்வராகவன் உள்ளிட்ட படக்குழுவினர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகின்றனர்.
தன்னுடைய இயக்கத்தில் உருவாகவுள்ள சூர்யா 45 படத்தின் பூஜையை நேற்றைய தினம் ஆர்ஜே பாலாஜி உள்ளிட்ட படக்குழுவினர் போட்டுள்ளனர். இன்று முதல் பொள்ளாச்சியில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கி தொடர்ந்து 45 நாட்கள் நடக்கவுள்ளது. இந்நிலையில் சொர்க்கவாசல் படத்திற்காக அதன் பிரமோஷனுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி.

ஆர்ஜே பாலாஜி: நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் விஜே, ஆர்ஜே, கிரிக்கெட் வர்ணனையாளர் என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அவரது இயக்கத்தில் வெளியான மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்கள் சிறப்பான விமர்சனங்களையும் வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் அடுத்ததாக சூர்யா லீட் கேரக்டரில் நடிக்கவுள்ள சூர்யா 45 படத்தையும் இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தின் பூஜை நேற்றைய தினம் பொள்ளாச்சியில் உள்ள மாசாணி அம்மன் கோயிலில் சிறப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில் இன்றுமுதல் பொள்ளாச்சியிலேயே சூட்டிங் துவங்கி தொடர்ந்து 45 நாட்கள் நடத்த திட்டமிடப்படப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் படம்: ஆர்ஜே பாலாஜியின் இயக்கத்தில் முன்னதாக அறிவிக்கப்பட்ட மாசாணியம்மன் படத்தின் கதைக்களத்தில்தான் சூர்யா இணைந்துள்ளதாகவும் அவருடன் நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் ஆர்ஜே பாலாஜி அப்டேட் தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கலாம். இதனிடையே நாளைய தினம் ஆர்ஜே பாலாஜி லீட் கேரக்டரில் நடித்துள்ள சொர்க்கவாசல் படம் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டிய அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஈடுபட்டுவரும் அவர், அடுத்தடுத்த பேட்டிகளை சுவாரஸ்யம் நீங்காமல் கொடுத்து வருகிறார்.
வீட்ல விசேஷம் படம்: முன்னதாக வீட்ல விசேஷம் என்ற படத்தை இயக்கியிருந்தார் ஆர்ஜே பாலாஜி. இந்தியில் ஹிட்டடித்த பதாய் ஹோ என்ற படத்தின் ரீமேக்காக உருவாகியிருந்த இந்தப் படத்தில் அவருடன் சத்யராஜ், ஊர்வசி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டகளில் நடித்திருந்தனர். வளர்ந்த இரு பிள்ளைகள் இருக்க 50 வயதில் கர்ப்பம் தரிக்கும் பெண்ணின் கேரக்டரை இந்தப்படத்தில் மிகவும் கச்சிதமாக வெளிப்படுத்தியிருந்தார் ஊர்வசி. படத்தில் வயதான தம்பதியின் அன்னியோன்னியத்தை இந்தப் படத்தில் ஊர்வசி -சத்யராஜ் இணைந்து சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தனர். படத்தில் ஆர்ஜே பாலாஜி -அபர்ணா பாலமுரளியை காட்டிலும் சத்யராஜ் -ஊர்வசி ஜோடி மிகச்சிறப்பாக ஸ்கோர் செய்திருந்தது.
ஊர்வசிக்கு ஆர்ஜே பாலாஜி பாராட்டு: இந்நிலையில் நடிகை ஊர்வசி குறித்து தனது சமீபத்திய பேட்டியில் ஆர்ஜே பாலாஜி பாராட்டித் தள்ளியுள்ளார்.இந்திய அளவில் சிறந்த நடிகர் என்றால் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், மம்முட்டி, அமிதாப் பச்சன் என பலரும் கைக்காட்டுவதை சுட்டிக் காட்டியுள்ள ஆர்ஜே பாலாஜி, தன்னை பொறுத்தவரை ஆண் நடிகர்கள், பெண் நடிகர்கள் என பட்டியல் எடுத்தால் இந்திய அளவில் டாப் 3யில் நடிகை ஊர்வசிதான் இருப்பார் என்று பாராட்டியுள்ளார். தான் ஏற்கும் கேரக்டராகவே மாறும் நடிகர்களில் ஊர்வசிக்கு சிறப்பான இடம் உண்டு. அதையே தற்போது ஆர்ஜே பாலாஜியும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











