சூர்யா நடிக்கும் கருப்பு படத்தின் இசை எப்போது?.. சூப்பர் அப்டேட்டை கொடுத்த இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான ரெட்ரோ திரைப்படம் சுமாரான வரவேற்பையே பெற்றது. இந்தப் படத்துக்கு முன்னதாக வெளியான கங்குவா படமும் தோல்வியடைந்துவிட்டதால்; ஆர்.ஜே.பாலஜி இயக்கத்தில் அவர் நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் பெரிய எதிர்பார்ப்பை உண்டு செய்திருக்கிறது. இந்நிலையில் படத்தின் இசை குறித்த அப்டேட்டை ஆர்.ஜே.பாலாஜி வெளியிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே இன்று கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களுள் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறது. கடைசியாக சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அப்படத்தில் திஷா பதானி, நட்டி, கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்துக்கு தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவும் ஏற்றிவிட்டார்கள். ஆனால் அந்தப் படம் பெரும் வெற்றியை பெறுவதற்கு பதிலாக படுதோல்வியை சந்தித்தது.
ஓவர் ஹைப்: குறிப்பாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்த ஞானவேல் ராஜா, 'டிசம்பர் மாதம் நடக்கும் கங்குவா படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்று கூறினார். அதேபோல் இரண்டாயிரம் கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என்றும் ஞானவேல் ராஜா நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்னபடி எதுவுமே நடக்கவில்லை. 200 கோடி ரூபாய்கூட படம் வசூலிக்கவில்லை.
கார்த்திக் சுப்புராஜுடன் ரெட்ரோ படம்: இதற்கிடையே கங்குவா படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தில் நடித்தார் அவர். கடந்த மே ஒன்றாம் தேதி படமானது வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸைவிடவும் ஓடிடியில் கொஞ்சம் அதிகமாகவேத்தான் இருந்தது.

கருப்பு சூர்யா: சூழல் இப்படி இருக்க இப்போது சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். முதன்முறையாக பாலாஜியின் இயக்கத்தில் சூர்யா நடித்திருப்பதால் இப்படத்தின் மீது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த ஆவல் இருக்கிறது. இருப்பினும் படத்தின் பெயரும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் தங்களை திருப்திப்படுத்தவில்லை என்றும் சூர்யா ஃபேன்ஸ் கூற செய்கிறார்கள்.
இசையமைப்பாளர்: முதலில் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகிவிட்டார். அவர் விலகியதை தொடர்ந்து சாய் அபயங்கர் இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார். இதுவரை இரண்டு ஆல்பம் பாடல்களை மட்டும் இசையமைத்து வெளியிட்டிருக்கும் அவர் கைவசம் இப்போது கருப்பு திரைப்படத்தையும் சேர்த்து மொத்தம் 7 படங்கள் இருக்கின்றன.
புதிய அப்டேட்: இசையமைத்து ஒரு படம்கூட வெளியாகாத சூழலில் சாய் அபயங்கரிடம் 7 படங்கள் இருப்பதை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில் கருப்பு திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டிருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. அதன்படி இந்தப் படத்தின் இசை உரிமத்தை திங்க் மியூசிக் நிறுவனம் வாங்கியிருப்பதாகவும்; விரைவில் இசை வெளியாகும் என்றும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











