Suriya: சூர்யா 45 சூட்டிங்கை கேன்சல் செய்த இயக்குநர்.. அப்படி என்னதான் நடந்துச்சு!

சென்னை: நடிகர் சூர்யா லீட் கேரக்டரில் நடித்து வரும் சூர்யா 45 படத்தை இயக்கி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. இந்த படத்தின் ஷூட்டிங் பொள்ளாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் நடந்து முடிந்த சூழலில் தற்போது அடுத்த கட்ட சூட்டிங் நடத்தப்பட்டு வருகிறது. இந்த படத்தில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியும் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டில் வெளியான சூர்யாவின் தங்குவா படம் சொதப்பலாக அமைந்த நிலையில் அடுத்ததாக வெளியாக உள்ள ரெட்ரோ மற்றும் சூர்யா 45 படங்களை அவர் அதிகமாக எதிர்பார்த்துள்ளார். இந்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

suriya suriya 45 movie rj balaji

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் சூர்யா 45 படத்தை இயக்கி வருகிறார் ஆர்ஜே பாலாஜி. சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான கங்குவா படம் அவருக்கு சொதப்பலாக அமைந்தது. கடந்த சில படங்கள் அவருக்கு சிறப்பாக அமையாத நிலையில் கங்குவா படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்த படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷனை விரைவில் படக்குழுவினர் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரொமாண்டிக் மற்றும் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் பூஜா ஹெக்டே.

சூர்யா 45 படம்: இந்நிலையில் அடுத்ததாக அவர் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் பொள்ளாச்சி உள்ளிட்ட பல இடங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் சிறிய கேரக்டரில் நடித்துள்ள காமெடி நடிகர் கோதண்டம், இயக்குநர் ஆர்ஜே பாலாஜி குறித்து பேசியுள்ளார். நடிகர் ஆர்ஜே பாலாஜி மிகவும் பர்ஃபெக்டாக ஒவ்வொரு காட்சியையும் சூர்யா 45 படத்திற்காக எடுத்து வருவதாகவும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சி ஒன்றில் ஆயிரம் துணை நடிகர்களை அவர் கேட்ட நிலையில் 400 பேர் மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்ததால் அவர் சூட்டிங்கை கேன்சல் செய்துவிட்டு சென்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆர்ஜே பாலாஜி குறித்து காமெடி நடிகர்: மேலும் சூட்டிங் ஸ்பாட்டில் ஒரு சேர் உடைந்தால்கூட அதே போன்ற சேர் கிடைக்கும் வரை அந்த காட்சியை ஆர்ஜே பாலாஜி எடுக்காமல் இருப்பது குறித்தும் நடிகர் சுட்டிக் காட்டியுள்ளார். தன்னுடைய படங்களில் திரைக்கதையை சிறப்பாக அமைத்து வெற்றி கண்டு வருபவர் ஆர்ஜே பாலாஜி. இந்நிலையில் அவர் ஷூட்டிங்கிலும் அதிக பர்ஃபெக்க்ஷனை காட்டி படத்தை எடுத்து வருவது குறித்து நடிகர் கோதண்டம் தெரிவித்துள்ள கருத்துக்கள் சூர்யா 45 படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

சூர்யாவுடன் மோதும் ஆர்ஜே பாலாஜி: இந்த படத்தில் ஆர்ஜே பாலாஜியும் லீட் கேரக்டரில் நடித்து வரும் நிலையில் அவர் சூர்யாவிற்கு எதிரான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அவருக்கு பதிலாக சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். டிரீம் வாரியர்ஸ் நிறுவனத் தயாரிப்பாக உருவாகிவரும் இந்தப் படம் அடுத்த ஆண்டில் ரிலீசாகவுள்ளதாக தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X