Suriya 45: நயன்தாரா இல்லனா த்ரிஷா.. த்ரிஷா இல்லனா சூரியா.. கதையை மாற்றிய ஆர்.ஜே.பாலாஜி!
சென்னை: நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் படத்தின் கதை பற்றிய தகவல் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றிப்படமாக இருந்தாலும், அந்த இரு படங்களும் ஓடிடி தளங்களில் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து எதிர்க்கும் துணிந்தவன் படம் தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன. அந்த படத்தை தொடர்ந்து, விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஐந்து நிமிடமே அந்த படத்தில் வந்தாலும், ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அந்த கேரக்டர் இருந்தது.

இந்த படத்திற்கு பிறகு சூர்யா நடித்து வரும் கங்குவா படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஸ்டுடியோ க்ரீன் K.E. ஞானவேல் ராஜா, யுவி கிரியேஷன்ஸ் வம்சி புரோமோத்துடன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை இயக்குநர் சிவா இயக்கி உள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தின் படத்தொகுப்பை நிஷாத் யூசுப் கவனித்து வருகிறார். இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். ஜமேக்ஸ் மற்றும் 3டி வடிவில் உருவாகி வரும் இப்படத்தை சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியிட இருப்பதாகவும், ஓடிடியில் 20 மொழிகளில் வெளியிட உள்ளதாகவும் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டியில் கூறியிருந்தார்.
ரிலீஸ் தேதி: மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி உள்ள இந்த படத்தில், அனிமல் படத்தில் வில்லனாக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாபி தியோல், 'உதிரன்' எனும் கேரக்டரில் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள், கிளிம்ஸ் வீடியோ, டீசர் உள்ளிட்டவை மக்களிடம் வரவேற்பை பெற்றது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த தேதியில் வேட்டையன் படம் ரிலீஸ் ஆனதால் படத்தின் ரிலீஸ் தேதியை படக்கு நவம்பர் 14ந் தேதிக்கு தள்ளிவைத்தது.
சூர்யா 45: கங்குவா படத்திற்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள 'சூர்யா 44' படத்தில் நடித்து வரும் சூர்யா, அடுத்ததாக ஆர்.ஜே. பாலாஜி இயக்க உள்ள படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்திற்கு தற்காலிகாக “சூர்யா 45” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளதாகவும்,ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் "சிவப்பு மஞ்சள் பச்சை", "பிடி சார்" போன்ற படங்களில் நடித்த நடிகை காஷ்மிரா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
கதையை மாற்றிய ஆர்.ஜே.பாலாஜி: இதையடுத்து இப்படத்தின் கதை பற்றி ஒரு தகவல் தற்போது வெளியாகி உள்ளது. ஆர்.ஜே.பாலாஜி நயன்தாராவை வைத்து மூக்குத்தி அம்மன் என்ற படத்தை இயக்கினார். இந்த படம் மிகபெரிய அளவில் வெற்றி பெற்றதை அடுத்து மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், முக்குத்தி அம்மன் 2 படத்தை சுந்தர் சி இயக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கு போட்டியாக ஆர்.ஜே பாலாஜி மாசாணி அம்மன் என்ற படத்தை இயக்குவதாக முடிவெடுத்தார்.
அந்த படத்தில் த்ரிஷா நடிப்பதாக தகவல் வெளியானது. ஆனால் படத்திற்கு சரியான நாயகி கிடைக்காததால் மாசாணி அம்மன் கதையை மொத்தமாக மாற்றி மாசாணி அம்மன் கதையை ஆண் தெய்வத்தின் கதையாக சூர்யாவிற்கு ஏற்ற கதையாக மாற்றி உள்ளார். இந்த கதையை சூர்யாவிடம் கூறிய பாலாஜி, அவருக்கு கதை பிடித்துப்போகவே தற்போது சூர்யா 45 திரைப்படம் உருவாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











