RJ Balaji: மூக்குத்தி அம்மன் இல்லன்னா மாசாணியம்மன்.. ஆர்ஜே பாலாஜி சொன்னத பாருங்க!
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆர்ஜே என அடுத்தடுத்த தளங்களில் பயணித்து வரும் ஆர்ஜே பாலாஜி ஹீரோவாகவும் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சூர்யாவை வைத்து சூர்யா 45 படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது.
சூர்யா 45 படத்தின் அறிவிப்பு போஸ்டரும் வெளியாகி வித்தியாசமான வகையில் ரசிகர்களை கவர்ந்தது. ஆன்மீகமும் அதிரடி ஆக்ஷனும் கலந்த படமாக இந்த படம் உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் குறித்து அடுத்தடுத்த தன்னுடைய பேட்டியில் பேசியுள்ளார் ஆர்ஜே பாலாஜி.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி: கடந்த இரண்டரை ஆண்டுகளாக கங்குவா படத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த நடிகர் சூர்யா, அடுத்தடுத்து தன்னுடைய படங்களில் வேகம் எடுத்து வருகிறார். தற்போது கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ள சூர்யா, அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இந்த படத்தின் அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வரும் ஆர்ஜே பாலாஜி இந்த படம் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
சூர்யா 45 படம்: சூர்யாவின் சூர்யா 45 படத்தின் டைட்டில் ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஆர்ஜே பாலாஜி, விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார். இந்த படத்தின் கதை குறித்து தான் முன்னதாக சூர்யாவிடம் கூறிய நிலையில் அவர் ஒரு மணி நேரத்திலேயே இந்த படத்தை உறுதி செய்து விட்டதாகவும் அவரது 16 ஆண்டு கால திரைப்பயணத்தில் அவர் இதுபோல செய்ததில்லை என்று அவரே கூறியதாகவும் ஆர்ஜே பாலாஜி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ள நிலையில், படத்தின் கதைக்களம் கிராமத்து பின்புலத்தில் அமைந்துள்ளதாக தெரிகிறது.
சொர்க்கவாசல் படம் ரிலீஸ்: படத்தின் அறிவிப்பு போஸ்டரில் அரிவாள் உள்ளிட்டவை காணப்பட்டன. வித்தியாசமான உருவமும் இந்த அறிவிப்பு போஸ்டரில் அமைந்திருந்தது. இதனால் ஆன்மீகமும் அதிரடி ஆக்ஷனும் கலந்த படமாக சூர்யா 45 உருவாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தடுத்த படங்களில் தன்னை நடிகராகவும் இயக்குநராகவும் இணைத்து வருகிறார் ஆர்ஜே பாலாஜி. அந்த வகையில் அவரது நடிப்பில் அடுத்ததாக சொர்க்கவாசல் படம் வரும் 29ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதன் அடுத்தடுத்த பிரமோஷன்களில் அவர் தன்னை ஈடுபடுத்தி வருகிறார்.
மாசாணியம்மன் பட இயக்குநர்: சூர்யா 45 படத்தை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி அடுத்ததாக மாசாணியம்மன் படத்தை இயக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மூக்குத்தி அம்மன் படத்தை இயக்கியிருந்தார் ஆர்ஜே பாலாஜி, இந்த படத்தில் நயன்தாரா, ஆர்ஜே பாலாஜி, ஊர்வசி உள்ளிட்டவர்கள் நடித்திருந்த நிலையில் படம் அம்மனை மையமாகக் கொண்டு அரசியல் பேசியிருந்தது. இந்நிலையில் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார் சுந்தர் சி. இதனிடையே மாசாணியம்மன் படத்தை இயக்கவுள்ளார் ஆர்ஜே பாலாஜி. இதனிடையே தற்போது சொர்க்கவாசல் படத்தின் பிரமோஷனுக்காக பேசியுள்ள ஆர்ஜே பாலாஜி, மூக்குத்தி அம்மன் இல்லை என்றால் மாசாணி அம்மன் என்று தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சுந்தர் சி குறித்து உற்சாகம்: மொத்தமாக 108 அம்மன்கள் உள்ளதாகவும் ஜெயராம் படத்தில் இந்த அம்மன்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 108 அம்மன்களின் படங்களை அடுத்தடுத்து இயக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மூக்குத்தி அம்மன் 2 படத்தை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும் அதனால் அதை தற்போது படத்தை சுந்தர் சி இயக்கி வருவதாகவும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். தன்னை சினிமாவில் அறிமுகம் செய்த சுந்தர் சி, தன்னுடைய படத்தின் அடுத்த பாகத்தை இயக்குவது உற்சாகம் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











