RJ Balaji: சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு கேட்டேன்.. ஆர்ஜே பாலாஜி பகிர்ந்த சீக்ரெட்!
சென்னை: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஆர்ஜே, விஜே, கிரிக்கெட் வர்ணனையாளர் என பல்வேறு திறமைகளுடன் கோலிவுட்டில் வலம்வந்துக் கொண்டிருப்பவர் ஆர்ஜே பாலாஜி. நானும் ரவுடிதான், எல்கேஜி, மூக்குத்தி அம்மன், ஜில் ஜங் ஜக், தேவி, சலூன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
மூக்குத்தி அம்மன் படத்தின்மூலம் சிறந்த நடிகராகவும் இயக்குநராகவும் வரவேற்பு பெற்ற ஆர்ஜே பாலாஜியின் இயக்கம் மற்றும் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிங்கப்பூர் சலூன் படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனிடையே அடுத்ததாக நடிகர் சூர்யாவின் சூர்யா 45 படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார்.

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி: நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விஜே,ஆர்ஜே என அடுத்தடுத்து ரசிகர்களை கவர்ந்துவரும் ஆர்ஜே பாலாஜி, கிரிக்கெட் வர்ணனையாளராகவும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது இயக்கம் மற்றும் நடிப்பில் நயன்தாரா, ஊர்வசி உள்ளிட்டவர்கள் நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்ற நிலையில், அடுத்ததாக மாசாணியம்மன் படத்தை இயக்கவுள்ளார் ஆர்ஜே பாலாஜி. இதனிடையே சூர்யாவின் சூர்யா 45 படத்தையும் இயக்க கமிட்டாகியுள்ளார். நானும் ரவுடிதான், தேவி, எல்கேஜி, ஜில் ஜங் ஜக் போன்ற படங்களில் நடித்து தொடர்ந்து வரவேற்பை பெற்ற நிலையில், சூர்யா படத்தை ஆன்மீகமும் ஆக்ஷனும் கலந்து இவர் உருவாக்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சொர்க்கவாசல் படம்: இதனிடையே ஆர்ஜே பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள சொர்க்கவாசல் படம் வரும் 29ம் தேதி ரிலீசாகவுள்ளது. இதன் ட்ரெயிலர் நாளை காலை வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மத்திய சிறைச்சாலையை மையமாக கொண்டு பீரியட் படமாக உருவாகியுள்ளது சொர்க்கவாசல். இந்தப் படத்தில் ஆர்ஜே பாலாஜியுடன் செல்வராகவன், கருணாஸ், பாலாஜி சக்திவேல், எழுத்தாளர் ஷோபா சக்தி உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். முன்னதாக இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் ஆகியவை வெளியாகி மிகப்பெரிய வரவேற்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன.
சிவகார்த்திகேயனிடம் மன்னிப்பு: இதனிடையே, இந்தப் படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் ஆர்ஜே பாலாஜி ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் கொடுத்துவரும் அடுத்தடுத்த பேட்டிகளில் தான் இதுவரை கடந்து வந்த பாதையையும் தன்னுடைய படங்கள், உடன் நடித்த நடிகர்கள், இயக்குநர்கள் என அனைத்து விஷயங்களையும் அவர் சுவாரஸ்யத்துடன் பகிர்ந்து வருகிறார். நயன்தாரா, விக்னேஷ் சிவனுடனான நட்பு குறித்தும் அவர் பேசியுள்ளார். இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயனிடம் தான் மன்னிப்பு கேட்ட சூழல் குறித்தும் ஆர்ஜே பாலாஜி தன்னுடைய பேட்டியொன்றில் பகிர்ந்துள்ளார்.
சிவகார்த்திகேயனை கலாய்த்த ஆர்ஜே பாலாஜி: கடந்த 2012 -13ல் தொலைக்காட்சியில் அவார்ட் நிகழ்ச்சிகளை கலாய்க்கும் ஷோவை தான் செய்ததாக கூறியுள்ளார். முன்னதாக அவார்ட் நிகழ்ச்சி ஒன்றில் சிவகார்த்திகேயன் எமோஷனலானதை தான் இந்த ஷோவில் கலாய்த்ததாகவும் ஆர்ஜே பாலாஜி குறிப்பிட்டுள்ளார். அந்த ஷோவை செய்தபோது அது தனக்கு தவறாக தெரியவில்லை என்றும் ஆனால் நிகழ்ச்சி டிவியில் ஒளிபரப்பானபோது அது தனக்கு தவறாக தெரிந்ததாகவும் இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு கால் செய்து தான் மன்னிப்பு கேட்டதாகவும் ஆர்ஜே பாலாஜி தற்போது தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











