Suriya 45: சூர்யாவிற்கு வில்லனான இயக்குநர்.. சூர்யா 45 சுவாரஸ்யம் சொன்ன பிரபல தயாரிப்பாளர்!
சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான அவரது கங்குவா மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையில் வெளியாகி சொதப்பலாக அமைந்தது. வரலாற்று பின்னணியில் இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கியிருந்தார்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்தது கங்குவா இருந்தபோதிலும் இந்தப்பம் ரசிகர்களை அதிகமாக கவரவில்லை. இந்நிலையில் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்ததாக சூர்யா 45 படத்திலும் நடித்து வருகிறார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வெளியானது கங்குவா படம். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தியிருந்த நிலையில் சிவா இயக்கத்தில் அதிகமான பொருட்செலவில் பிரம்மாண்டமாக இந்தப்படம் உருவாகியிருந்தது. ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இயக்கத்தில் இந்தப்படம் உருவாகியிருந்த நிலையில் படம் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் திணறியது. வசூலிலும் சொதப்பியது. இந்நிலையில் அடுத்ததாக சூர்யா நடிப்பில் சூர்யா 44 படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.
ரெட்ரோ படம்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ள நிலையில் விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு ரெட்ரோ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் படம் ரொமாண்டிக் மற்றும் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் டீசர் வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அடுத்ததாக ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் பொள்ளாச்சி உள்ளிடட இடங்களில் நடந்து முடிந்துள்ளது.
சூர்யாவிற்கு வில்லனான இயக்குநர்: இதையடுத்து படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் வரும் 20ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துவரும் நிலையில் சென்னையில் பிரம்மாண்டமான நீதிமன்ற செட் போடப்பட்டு சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவின் வில்லனாக நடிகரும் படத்தின் இயக்குநருமான ஆர்ஜே பாலாஜியே நடித்துள்ளதாக தற்போது தயாரிப்பாளர் தனஞ்செயன் உறுதிப்படுத்தியுள்ளார். கவுண்டர் லாயராக ஆர்ஜே பாலாஜி நடித்துள்ளதாக அவர் கூறியுள்ளார். சூர்யா மற்றும் ஆர்ஜே பாலாஜி திட்டமிட்டு இந்த காம்பினேஷனை உருவாக்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரசிகர்களை இணைக்கும் அம்சங்கள்: இதுமட்டுமில்லாமல் சூர்யா 45 படத்தில் சமூக அக்கறை உள்ளதாகவும் கிராமப்புற ரசிகர்களையும் இணைக்கும்வகையில் படத்தில் தீம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். சிறப்பான கமர்ஷியல் பாணியில் இந்தப் படம் உருவாகி வருவதாகவும் தனஞ்செயன் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் படத்தில் நடிகை திரிஷா சூர்யாவுடன் இணைந்து லீட் கேரக்டரில் நடித்துள்ள நிலையில், சுவாசிகா உள்ளிட்ட பலரும் படத்தில் இணைந்துள்ளனர். ஆன்மிகமும் அதிரடி ஆக்ஷனும் இணைந்த கதைக்களத்தில் படத்தை ஆர்ஜே பாலாஜி உருவாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











