சிறை படம் அவங்களை செருப்பை கழட்டி அடிச்ச மாதிரி இருக்கு.. இயக்குநர் RK செல்வமணி யாரைச் சொல்லுகிறார்?

சென்னை: 2025 ஆம் ஆண்டின் கடைசி வெள்ளிக்கிழமை வெளியாகி கடந்த ஆண்டில் வெளியான தரமான படம் என்ற பெயரைப் பெற்ற சிறை படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு உள்ளது. இயக்குநர் வெற்றி மாறனின் உதவி இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி இந்த படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்துள்ளார். இந்த படம் தொடர்ந்து திரைப்பிரபலங்கள் பலரிடம் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில் இயக்குநர் ஆர்.கே. செல்வமணி இந்த படத்தை பார்த்துவிட்டு தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

சிறை படத்தில் விக்ரம் பிரபு கதாநாயகனாக நடித்துள்ளார். படத்தின் கதை, திரைக்கதையை இயக்குநர் தமிழ் எழுதி உள்ளார். படத்தை செவன் ஸ்டார்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் படக்குழுவினரை பாராட்டி வருகிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் இருக்கும் மூத்த இயக்குநர் ஆர்.கே. செல்வமணி படம் பார்த்த பின்னர் தனது படங்களில் தான் செய்த தவறையும் ஒத்துக் கொண்டுள்ளார்.

Director RK Selvamani Appreciate Sirai Movie And He Ask Apologies For Portraits Muslim are Villans
Photo Credit:

ஆர்.கே. செல்வமணி: அதாவது, " நான் கூட எனது படங்களில் இஸ்லாமியர்களை வில்லனாக காட்டி உள்ளேன். முன்பு இருந்த காலகட்டத்தில் இருந்த தூண்டுதலில் நான் இப்படியான கதாபாத்திரங்களை வடிவமைத்து, தவறு செய்து விட்டேன். நானும் போலீஸ் படம் எடுத்திருக்கிறேன். ஆனால் சிறை படம் பார்த்த பின்னர், எனக்கு ரொம்பவும் அவமானமாக இருந்தது. சிறை படத்தில் இருக்கும் காவல்துறை காட்சி, இந்திய ஒருமைப்பாட்டிற்கு சிறந்த உதாரணமாக இருந்தது. இந்த காட்சி, மதத்தை வைத்து அரசியல் செய்பவர்களை காலில் இருக்கும் செருப்பைக் கழட்டி அடிச்ச மாதிரி இருந்திருக்கும். அவ்வளவு அழகா அந்த படத்தை எடுத்து இருக்காங்க" என்று பாராட்டி உள்ளார்.

ஷங்கர்: ஏற்கனவே இந்த படத்தை பார்த்த இயக்குநர் ஷங்கர், " சிறை மிகச்சிறந்த படம். படத்தின் பல இடங்கள் எனக்கு கண்ணீர் வரவழைத்து விட்டது. படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அவர்களின் நடிப்பும் படம் பார்த்த பின்னரும் என்னுடனே இருந்தது. விக்ரம் பிரபு படம் முழுவதும் சிறப்பாக நடித்திருந்தார். எல்.கே. அக்‌ஷய் குமார் மற்றும் அனீஷ்மா அனில் குமாரின் அப்பாவித்தனமான நடிப்பும் படம் பிடித்துக் காட்டியது சிறப்பு. இப்படியான படத்தை கொடுத்த தயாரிப்பாளர் எஸ்.எஸ். லலித் குமாருக்கு பாராட்டுகள்.

Director RK Selvamani Appreciate Sirai Movie And He Ask Apologies For Portraits Muslim are Villans
Photo Credit:

வருட இறுதி: இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரி தனது சிறப்பான அறிமுகத்தின் மூலம் எங்கள் இதயங்களை சிறைபிடித்து விட்டார். படத்தின் கிளைமாக்ஸில் சொல்லப்பட்ட கருத்து மிகவும் முக்கியமானது மற்றும் சம காலத்திற்கு தேவையானதும் கூட. தமிழ் சினிமா இந்த ஆண்டை சிறந்த படத்துடன் நிறைவு செய்துள்ளது என்று பாராட்டினார். படம் முழுவதும் சிறப்பாக இருந்தாலும் மூணாறு ரமேஷ் நடித்த காவல் நிலைய காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X