விஜய் மறுபடியும் சினிமாவில் நடிக்கக்கூடாது.. என்ன இயக்குநர் ஆர்கே செல்வமணி இப்படி சொல்லிட்டாரு?
சென்னை: நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் நடித்துவரும் நிலையில் இந்த படத்தின் பாடல் காட்சி கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்த படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் விஜய் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நடிகர் விஜய் மீண்டும் சினிமாவில் நடிக்கக்கூடாது என்று இயக்குநர் ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.
இயக்குனரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர் கே செல்வமணி தான் கொடுத்துள்ள பேட்டியில் விஜய் குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். தான் நான்கைந்து முறை விஜய்யை சந்தித்து பேசியுள்ளதாகவும் அவர் மிகச்சிறந்த நடிகர் என்றும் புகழ்ந்துள்ளார். உலகத்தமிழர்களால் நேசிக்கப்படும் விஜய், அவர் படங்களில் நடிப்பதிலிருந்து விலகவுள்ளது திரைப்படத்துறைக்கு மிகப்பெரிய இழப்புதான் என்றும் ஆர்கே செல்வமணி கூறியுள்ளார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய் தற்போது தளபதி 69 படத்தில் இணைந்து நடித்து வருகிறார். கடந்த 6ம் தேதி இந்த படத்தின் சூட்டிங் துவங்கப்பட்ட நிலையில் இந்த படத்தின் முதல் பாடல் காட்சி பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தின் அடுத்த கட்ட சூட்டிங் குறித்து விரைவில் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். தற்போது தன்னுடைய கட்சி மாநாட்டிற்கான பணிகளில் நடிகர் விஜய் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். வரும் 27ம் தேதி இதன் மாநாடு நடக்க உள்ள நிலையில் அடுத்தடுத்த வேலைகளில் அவர் திட்டமிட்டு செயலாற்றி வருகிறார்.
தளபதி 69 படம்: தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்தை தொடர்ந்து சினிமாவில் இருந்து விலக உள்ளதாகவும் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் முன்னதாகவே விஜய் அறிவித்துள்ளார். கடந்த மாதத்தில் வெளியான அவரது கோட் படம் ரசிகர்களை கவர்ந்து குறிப்பாக தமிழ்நாட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வெற்றி நடை போட்டது. படத்தின் ஒட்டுமொத்த வசூல் 455 கோடி என ஏஜிஎஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. படம் இம்மாதம் 3ம் தேதி ஓடிடியிலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் நடிகர் விஜய் மீண்டும் சினிமாவிற்கு நடிக்க வரக் கூடாது என்று இயக்குநரும் பெப்சி அமைப்பின் தலைவருமான ஆர்கே செல்வமணி தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.
சொன்னதை செய்பவர் விஜய்: அவர் மேற்கொண்டுள்ள புதிய முயற்சியில் வெற்றி பெறவில்லை என்றால் மட்டுமே அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வருவார் என்றும் அவரது புதிய முயற்சியில் வெற்றி பெற வேண்டும் என்றும் ஆர்கே செல்வமணி வாழ்த்து தெரிவித்துள்ளார். விஜய்யை இதுவரை நான்கு முறை சந்தித்து பேசி உள்ளதாகவும் அவர் தான் எடுத்துக் கொண்ட விஷயத்தை சரியாக நடத்தி காட்டுவார் என்றும் செல்வமணி மேலும் கூறியுள்ளார். அவர் சொன்ன விஷயங்களை இதுவரை 100 சதவிகிதம் காப்பாற்றியுள்ளதாகவும் செல்வமணி பாராட்டு தெரிவித்துள்ளார்.
வேட்டையன் ரஜினி படமில்லை: தொடர்ந்து பேசிய ஆர்கே செல்வமணி வேட்டையன் படம் குறித்து பாராட்டியுள்ளார். வேட்டையன் படம் சிறப்பாக உள்ளதாகவும் ஆனால் ரஜினியின் படமாக இதை பார்க்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். வேட்டையன் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்று கூறியுள்ள, ஆர்கே செல்வமணி, ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு இந்தப் படம் ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம் என்றும் ஆனால் ஒட்டுமொத்த ரசிகர்களை படம் அதிகமாக கவர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து, தான் அடுத்ததாக தன்னுடைய இயக்கத்தில் புதிய படத்தின் சூட்டிங்கை அடுத்த மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











