இயக்குநர் ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடி உடைப்பு..காவல் நிலையத்தில் புகார்!
சென்னை : ஆர்.கே.செல்வமணியின் கார் கண்ணாடியை மர்ம நபர்கள் அடித்து உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் ஆர்.கே செல்வமணி.
பெப்சி திரைப்பட இயக்கத்தின் முன்னாள் தலைவரான இயக்குனர் ஆர்.கே.செல்வமணி, தற்போது தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்க தலைவராக பதவி வகித்து வருகிறார்.

ஆர்.கே.செல்வமணி
பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ஆகிய திரைப்படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆர்.கே.செல்வமணி. இவர் இயக்குநராக அறிமுகமான புலன் விசாரணை திரைப்படமே இவரை புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது. விஜயகாந்த் லீட் ரோலில் நடிக்க சரத்குமார் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்தது ஆர்.கே.செல்வமணிக்கு திறமையான இயக்குநர் என்ற அங்கீகாரத்தை கொடுத்தது.

கேப்டன் பிரபாகரன்
விஜயகாந்திற்கு கேப்டன் என்ற பட்டத்தை பெற்றுத்தந்த கேப்டன் பிரபாகரன் படம் வேறலெவலில் ஹிட்டடித்தது. போலீஸ் அதிகாரியாக கேப்டன் பிரபாகரன் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டி இருந்தார் விஜயகாந்த். இந்த படத்தின் வசனங்களுக்கு திரையரங்கில் கைத்தட்டல்கள் குவிந்தன. குறிப்பாக இறுதி காட்சியில் நீதிமன்றத்தில் விஜயகாந்த் பேசும் அனல் தெறிக்கவிட்டது.

காதல் திருமணம்
ஆர்.கே.செல்வமணியின் மூன்றாவது படமாக செம்பருத்தி படத்தை இயக்கினார். இப்படத்தில் ரோஜாவை அறிமுகம் செய்து வைத்த ஆர்.கே செல்வமணி அவரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். ரோஜா நடிப்பை நிறுத்தி விட்டு அரசியலில் அதிக ஈடுபாடு செலுத்தி வருகிறார். தற்போது இவர் ஆந்திராவில் நகரி எம்எல்ஏ வாக இருக்கிறார்.

கார் கண்ணாடி உடைப்பு
இந்நிலையில், சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆர்.கே.செல்வமணியின் வீட்டில் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆர் கே செல்வமணி நேற்று மாலை பணி நிமித்தமாக சாலிகிராமம் கண்ணம்மாள் தெருவுக்கு சென்று மீண்டும் தனது காருக்கு திரும்பிய போது இனோவா கார் மர்ம நபரால் தாக்கப்பட்டு சேதம் அடைந்திருப்பது தெரியவந்தது.

சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யும் போலீசார்
சிசிடிவி காட்சிகளை சோதனை செய்தபோது ஆட்டோ டிரைவர் ஒருவர் இனோவா காரின் அருகே வந்து கல்லால் காரின் பின்புற கண்ணாடி மற்றும் பக்கப்பகுதிகளை அடித்து சேதப்படுத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஆர்.கே செல்வமணியின் கார் ஓட்டுநர் பாலமுருகன் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











