பாலைவனச் சோலை பட இயக்குனர் ராபர்ட் மறைவு... திரையுலகினர் அஞ்சலி!

பாலைவனச் சோலை உள்ளிட்ட படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் ராபர்ட் ஆசிர்வாதம் காலமானார்.

Recommended Video

பிரபல இயக்குநர் ராபர்ட் உடல்நலக் குறைபாட்டால் சென்னையில் காலமானார்.

சென்னை: பிரபல இயக்குநர் ராபர்ட் உடல்நலக் குறைபாட்டால் சென்னையில் காலமானார்.

டி.ராஜேந்தரின் ஒருதலை ராகம் படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் ராபர்ட் (68). அதன்பிறகு இயக்குநர் ராஜசேகருடன் இணைந்து, 'பாலைவனச் சோலை, கல்யாணகாலம், சின்னப்பூவே மெல்லப் பேசு, பறவைகள் பலவிதம், மனசுக்குள் மத்தாப்பூ, புதிய சரித்திரம்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவோடு, இயக்கவும் செய்தார்.

Director Robert Asirvatham passed away

இவர்கள் இயக்கிய படங்கள் 1980-களில் வெளியாகி வெற்றி பெற்றன. பின்னர் இருவரும் பிரிந்து தனித்தனியாக படங்கள் இயக்கினார்கள். அவை சரியாக போகவில்லை. இந்த இரட்டை இயக்குனர்களில் ராஜசேகர் டிவி சீரியல்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சென்னை கொளத்தூரில் வசித்து வந்த ராபர்ட், சமீபகாலமாக உடல்நலக் குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். அவரது இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X