Mahavir Karna: விக்ரமின் மஹாவீர் கர்ணா.. டைரக்டர் சொன்ன தகவல் இதோ!

சென்னை: நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது மஹாவீர் கர்ணா. இந்தப் படத்தின் பூஜையும் பிரம்மாண்டமாக போடப்பட்டது.

மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிட்டப்பட்ட இந்தப் படம் தவிர்க்க முடியாத காரணங்களால் சூட்டிங் துவங்கப்படாமல் நிறுத்தப்பட்டது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகவிருந்த மஹாவீர் கர்ணா படத்தை மலையாள இயக்குநர் ஆர்எஸ் விமல் இயக்கவிருந்தார்.

Director RS Vimal updates about Vikrams Mahavir Karna movie shooting

விக்ரமின் மஹாவீர் கர்ணா சூட்டிங் அப்டேட் சொன்ன இயக்குநர்: நடிகர் விக்ரம் நடிப்பில் க,ந்த 2018ம் ஆண்டில் அறிவிக்கப்பட்டு கேரளாவின் பத்மநாப கோயிலில் பிரம்மாண்டமாக பூஜை போடப்பட்டது மஹாவீர் கர்ணா படம். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்த இந்தப் படத்தை மலையாள இயக்குநர் ஆர்எஸ் விமல் இயக்கவிருந்தார். வரலாற்றுக் கதைக்களத்தில் உருவாகவிருந்த இந்தப் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு காணப்பட்டது. இந்தப் படத்தை தொடர்ந்து பொன்னியின் செல்வன் என்ற வரலாற்றுப் படத்தில் விக்ரம் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் நடிப்பில் உருவாகிவந்த துருவ நட்சத்திரம் படமும் 2018ம் ஆண்டில்தான் அறிவிக்கப்பட்டு சூட்டிங் நடத்தப்பட்டது. ஆனால் அந்தப் படமும் ட்ராப், ஆகிய நிலையில் தற்போது மீண்டும் அந்தப் படத்தின் சூட்டிங் எடுக்கப்பட்டு தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. படம் தீபாவளியையொட்டி நவம்பர் 24ம் தேதி ரிலீசாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்தப் படமும் பான் இந்தியா படமாகவே வெளியாகவுள்ளது. கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஸ்டைலிஷ்ஷான விக்ரமை பார்க்க முடிகிறது.

இதேபோல தற்போது கிடப்பில் போடப்பட்ட விக்ரமின் மஹாவீர் கர்ணா படத்தையும் துவக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளார் படத்தின் இயக்குநர் ஆர்எஸ் விமல். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டிருந்தது மஹாவீர் கர்ணா. சர்வதேச அளவில் 32 மொழிகளில் வெளியிடவும் திட்டமிடப்பட்டிருந்தது.

Director RS Vimal updates about Vikrams Mahavir Karna movie shooting

இந்தப் படம் குறித்து கடந்த சில மாதங்களுக்கு முன்பும் ஆர்எஸ் விமல் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாக பதிவிட்டிருந்தார். இந்நிலையில் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய ஒவ்வொரு படத்திற்காகவும் அதிகமாக மெனக்கெடுபவர் விக்ரம். தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் அவர் நடித்து முடித்துள்ள தங்கலான் படத்திலும் வித்தியாசமான கெட்டப்பில் அவர் காணப்படுகிறார். படத்தில் இருவேறு கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளார்.

இதேபோல கடத்ந 2018ம் ஆண்டில் துவங்கப்படவிருந்த மஹாவீர் கர்ணா படத்திற்காக தன்னுடைய உடலை மிகவும் சிறப்பாக உருவாக்கியிருந்தார் விக்ரம். இந்தப் படத்திற்காக குதிரையேற்ற பயிற்சியையும் அவர் மேற்கொண்டிருந்தார். இந்த பயிற்சியே தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்கு அவருக்கு சிறப்பாக கைகொடுத்தது. அதேபோல ஸ்டண்ட் கலைஞர்களுடன் இணைந்து மஹாவீர் கர்ணா படத்தின் போர்க் காட்சிகளுக்காகவும் அவர் சிறப்பாக பயிற்சி பெற்றிருந்தார். இந்நிலையில் இந்தப் படம் மீண்டும் சூட்டிங் துவங்கவுள்ளது அவருக்கு மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களுக்கும் இனிப்பான செய்தியாகவே இருக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X