தமிழ் சினிமாவின் பின்னடைவுக்கு காரணம் என்ன தெரியுமா? ஆர்.வி.உதயகுமார் பேச்சு!

சென்னை: சதாசிவம் சின்னராஜ் எழுதி இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் 'இஎம்ஐ- மாதத் தவணை'. நகைச்சுவை கலந்த சென்டிமென்ட் படமாக உருவாகியுள்ள இப்படத்தில் சாய் தான்யா, பேரரசு, பிளாக் பாண்டி, ஆதவன், ஓஏகே சுந்தர், லொள்ளுசபா மனோகர் ஆகியோர் நடித்துள்ளனர். சபரி புரொடக் ஷன்ஸ் சார்பில் மல்லையன் தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரான்சிஸ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு நாத் பிச்சை இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அதில் பேசிய இயக்குனர் ஆர்.வி.உதயகுமார், கொஞ்ச நாளாகவே அனைவரும் பெரிய படங்களாக எடுத்துக்கொண்டே இருப்பதால், சின்ன படங்கள் தானாகவே பெயர் வாங்கிக் கொண்டு சென்று விடுகின்றன. பெரிய படத்தில் நடிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள். ஆனால் சிறிய படத்தில் ஜெயிக்க வேண்டும் என்கிற உணர்வோடு, வெறியோடு இருப்பதால் சின்ன படங்கள் ஜெயிக்கின்றன. இதனால் சிறிய படங்களை தொடர்ந்து ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.

ஆர்.வி.உதயகுமார்: ஏனென்றால் சிறிய படங்களில் இருந்துதான், பெரிய இயக்குனர்கள் உருவாகிறார்கள். அப்படி சிறிய படம் வெற்றியானதும். பெரிய நடிகர்கள் அவர்களை அழைத்து வாய்ப்பு கொடுத்து அந்த இயக்குனரை ஒன்றும் இல்லாமல் செய்து விடுகின்றனர். உதயகுமார் படம், பாரதிராஜா படம், பாக்யராஜ் படம் என்று பெயர் வாங்கும் அளவிற்கு படங்களை எடுக்க வேண்டும். அப்போதுதான் தமிழ் சினிமா ஜெயிக்கும். இன்றைய தமிழ் சினிமாவின் குவாலிட்டியை நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் கண்டென்டு தான் சரியில்லை. எங்கள் காலத்தில் ஒரு கிரைன், ஒரு ரவுண்ட் ட்ராலியை வைத்துக் கொண்டே ஒரு படத்தை எடுத்து முடித்து விடுவோம். ஆனால், தற்போது ஒரே காட்சியை 15 முதல் 20 கேமராக்களை வைத்து எடுக்கிறார்கள்.

EMI Rv Udayakumar EMI Rv

பின்னடைவுக்கு காரணம்: நாங்கள், ஒரே கேமராவை வைத்து ஒரே காட்சியைத் தான் எடுப்போம். அதுதான் படத்தில் வரும். இன்றைய காலத்தில் மூன்று கேமரா, நான்கு கேமராக்களை வைத்து படத்தை எடுக்கும் இயக்குனர்கள் தான் பெரிய இயக்குனர்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால். உண்மையில் அப்படியில்லை. எந்த காட்சியை எடுத்தால் படத்திற்கு போதுமானது என்று தெரிந்து வைத்துக் கொண்டு எடுப்பவன் தான் உண்மையான இயக்குனர். இதை நான் சொல்வதற்கு காரணம் தெளிவான திரைக்கதை தெளிவான காட்சி அமைப்பு இருக்கிற திரைப்படங்கள் தான் வெற்றி பெறும். தற்போது, தெலுங்கு சினிமா நம்பர் 1 இடத்திலும், மலையாள சினிமா இரண்டாம் இடத்திலும் உள்ளது. தமிழ் சினிமா ஆறாவது இடத்திற்கு சென்றுள்ளது. சரியான தயாரிப்பாளர்கள் இல்லாததே தமிழ் சினிமாவின் பின்னடைவிற்கு காரணம் என்றார்.

EMI Rv Udayakumar EMI Rv

நல்லதுக்கும் இருக்கு: இதைத்தொடர்ந்து பேசிய, பாக்கியராஜ், நான், என் முதல் படத்துக்கு ஒரு மொக்கை கதையைத் தான் வைத்திருந்தேன். ஆனால் உதவி இயக்குநராக வேலை பார்க்க ஆரம்பித்த பிறகு, அதைத் தூக்கிப் போட்டுவிட்டேன். பின் நம் வாழ்க்கையில் இருந்து கதையை எடுப்போம் என கதையை உருவாக்கினேன். நம் வாழ்க்கையில் இருந்து கதை எடுத்தால் படம் ஜெயிக்கும். 'இஎம்ஐ' பிரச்சனை அனைவருக்கும் இருக்கும். இதில் நல்லதும் இருக்கிறது, கெட்டதும் இருக்கிறது. அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். இந்த விழாவில், இயக்குநர்கள் அரவிந்தராஜ், ஆர்.வி.உதயகுமார், நடிகை தேவயானி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Read more about: rv udayakumar
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X