Kamalhaasan: கமல் ஹாசனை வைத்து நான் எடுத்த படம் மொக்கை.. 32 ஆண்டுகளுக்குப் பின் இயக்குநர் ஓபன்!

சென்னை: தமிழ் சினிமா ரசிகர்கள் ஓடிடி தளங்களில் உலக சினிமாக்களை வேற்று மொழி சினிமாக்களை பார்க்கத் தொடங்கிய பின்னர் தமிழ் சினிமாவில் வெளிவரும் பல மொக்கைப் படங்களை தோல்வி அடையச் செய்துள்ளனர். குறிப்பாக ஓடிடி தளங்கள் வெகுஜன மக்கள் மத்தியில் வருவதற்கு முன்னர், உலக சினிமா மீது ஆர்வம் உடைய ரசிகர்கள் மட்டும் தமிழ் சினிமாவின் பல படங்களை நிராகரித்து வந்தனர். இன்னும் சொல்லப்போனால் நடிகர்களுக்காக ஒரு பெரும் கூட்டம் படங்களைக் கொண்டாடியபோது, இயக்குநர்களுக்காக தியேட்டரை நாடியவர்கள் அவர்கள்.

இப்படியான நிலையில் 32 ஆண்டுகளுக்கு முன்னர் தனது இயக்கத்தில் உருவாகி வெளியாகி வெற்றிப் படமாக மாறிய சிங்காரவேலன் படத்தினை மொக்கைப் படம் என இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் மேடையில் தெரிவித்துள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும் அந்தப் படத்தின் ரிலீஸ்க்கு முன்னர், ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்ததையும் கூறி பலரையும் ஷாக் ஆக வைத்துள்ளார்.

rv udhayakumar singaravelan kamalhaasan

இது தொடர்பாக அவர் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், " சில நேரங்களில் மொக்கை சினிமா ஓடும். என்னுடைய சிங்காரவேலன் மொக்கை சினிமா. கமல் சாரை வைத்து எடுக்கவேண்டிய படமாக அது. கதையே இல்லாமல் எடுக்கப்பட்ட படம்தான் அது. என்ன லொள்ளு இருக்கும். சின்னக் குழந்தையாக இருக்கும்போது, காணாமல் போன பெண்ணை தேடிக் கண்டுபிடித்து கல்யாணம் செய்யவேண்டும். இது கதையா? எனக்கு ஆச்சரியமான விஷயம் என்றால் இந்த ஒன் லைனை தயாரிப்பாளர் ஓ.கே. எனச் சொல்லிவிட்டார். முழுக்க முழுக்க பாடல்களாகவே கொடுத்துவிடுகின்றேன் என இளையராஜா சார் கூறினார்.

சிங்காரவேலன்: படம் ரிலீஸ்க்கு முன்னர், தயவு செய்து இந்தப் படத்தினைப் பார்க்க வருபவர்கள் மூளையைக் கழட்டி வைத்துவிட்டு வருமாறு கடிதம் எழுதினேன். ஏனென்றால் வந்து என்னைத் திட்டிவிடக்கூடாது பாருங்க. நான் இதுமாதிரி செய்ததும், இளையராஜா சார் கூப்பிட்டு என்னய்யா எனக் கேட்டார். நான் உடனே, ஆமாம் சார், இப்பத்தான் சின்னக்கவுண்டர் படம் நல்லா ஓடீட்டு இருக்கு. அந்தப் படம் எடுத்தவனா இந்தப் படத்தினை எடுத்தான், கதையே இல்லாமல் ஒரு படத்தினை எடுத்துவிட்டானே என என்னைத் திட்டிவிடக்கூடாது பாருங்க எனக் கூறினேன்.

காமெடி: நான் தீவிரமாக உழைக்கவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். கதை நன்றாக இல்லை என்றால் என்ன, திரைக்கதை நன்றாக அமைப்போம் என முடிவு செய்தேன். எனவே படத்தின் ஆரம்பக் காட்சியில் இருந்து கடைசி காட்சி வரை சிரித்துக் கொண்டே இருக்க வேண்டும் என முடிவு செய்து அதற்கு தேவையானவற்றை உள்ளே சேர்த்தோம். தேங்காயும் நெல்லும் விளையக்கூடிய பொள்ளாச்சி என்ற ஊரில் இருந்து மெட்ராஸ்க்கு யாராவது கருவாடு எடுத்து வருவார்களா? மெட்ராஸில் இல்லாத கருவாடா?

rv udhayakumar singaravelan kamalhaasan

மூளையைக் கழட்டி: ஆனால் இப்போதுவரை அது தொடர்பாக என்னை யாருமே கேள்வி கேட்கவில்லை. அப்படியான ரசிகர்கள்தான் எனக்கு மிகவும் பிடித்தமான ரசிகர்கள். நான் சொன்னதைப்போல் அந்த ரசிகர்கள் வீட்டிலேயே மூளையைக் கழட்டி வைத்துவிட்டு படம் பார்க்க வந்தார்கள். ஒரு படம் வெற்றி பெற நல்ல கதை மட்டும் போதாது. நேரம் நன்றாக இருக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ரிலீஸ் தேதி, நமது படம் வெளியாகும்போது வேறு நல்ல படங்கள் ஓடிக்கொண்டு உள்ளதா? தியேட்டர்கள் காலியாக உள்ளதா? என்பதுதான் அது. நல்ல கதையும், திரைக்கதையும் கடின உழைப்பும் இருந்தாலும் கூட நேரம் நன்றாக இருக்கவேண்டும்" என பேசினர். கடந்த 1992ஆம் ஆண்டு வெளியான படம் சிங்கார வேலன். இந்தப் படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆன நிலையில் படம் குறித்து படத்தின் இயக்குநரே இவ்வாறு கூறியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் கமல் மற்றும் குஷ்பு முக்கிய வேடத்தில் நடித்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X