Vijay: விஜய் இன்றைக்கு இப்படி இருக்க அந்த இரண்டும்தான் காரணம்.. குண்டைத் தூக்கிப்போட்ட இயக்குநர்!
சென்னை: நடிகர் விஜய் இன்றைக்கு தமிழ் சினிமாவிலும் தமிழக அரசியல் களத்திலும் மிகவும் முக்கியமானவராக உள்ளார். கடந்த ஆண்டு பிப்ரவரி 2ஆம் தேதி தனது ரசிகர் மன்றத்தினை, அரசியல் கட்சியாக மாற்றி அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இந்தக் கட்சி தமிழ் நாடு அரசியல் களத்தில் கவனம் பெற்றுள்ளது. இப்படியான நிலையில் விஜய் மற்றும் அவரது கட்சி குறித்து, பிரபல இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் பேசியுள்ளது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகர் விஜய், தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரின் மகன். நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜய்க்கு ஆரம்பத்தில் சில படங்கள் வொர்க் அவுட் ஆகவில்லை. அதன் பின்னர், அவர் விஜய்காந்த் உடன் இணைந்து செந்தூரப்பாண்டி படத்தில் நடித்தார். அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடிக்க, அதன் பின்னர் மெல்ல மெல்ல தமிழ் சினிமாவில், தன்னை நிலைநிறுத்திக் கொண்டார்.

இன்றைக்குள்ள நடிகர்களில் தமிழ் சினிமா உலகில் இவரைப் போல நடனம் ஆடவும், சண்டைக் காட்சிகளில் நடிக்கவும் இவருக்கு இணையாக யாரும் இல்லை எனக் கூறும் அளவிற்கு தன்னை உருவாக்கிக்கொண்டார். இதுவரை 68 படங்களில் நடித்துள்ள விஜய், தற்போது சினிமா வாழ்க்கையில் தனது கடைசி படமான இன்னும் பெயரிடப்படாத தளபதி 69 என்ற படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படம் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தினை கே.வி.என் புரெடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஹெச். வினோத் இயக்குகின்றார். அனிருத் இசை அமைக்கின்றார். படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
விஜய் அரசியல்: படப்பிடிப்பு அரசியல் என இரண்டிலும் கவனம் செலுத்தி வரும் விஜய், தனது 69வது படத்திற்குப் பின்னர், சினிமாவில் இருந்து முற்றிலும் விலகவுள்ளார். மேலும் முழுக்க முழுக்க அரசியலில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். கடந்த அக்டோபரில் தனது கட்சியின் முதல் மாநில மாநாடு, சில தினங்களுக்கு முன்னர், பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 900 நாட்களுக்கு மேலாக போராடும் மக்களைச் சந்தித்து பேசினார்.
ஆர். வி. உதயகுமார்: இப்படியான நிலையில் பிரபல மூத்த இயக்குநர், ஆர். வி. உதயகுமார், மனிதம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்திப் பேசினார். அப்போது நடிகர் விஜய் குறித்தும் அவரது அரசியல் வருகை குறித்தும் பேசினார். இது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. அதாவது விஜய் அரசியலுக்கு வர அவருக்கு நம்பிக்கை கொடுத்ததே, ஸ்ரீகாந்த் தேவா இசையில் உருவான திருப்பாச்சி மற்றும் சிவகாசி படங்கள் இல்லை என்றால் விஜய் இன்றைக்கு கட்சி ஆரம்பித்து இருக்க முடியுமா? ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்த படங்கள்தான் விஜய்க்கு இன்றைக்கு வரை பேசப்படும் படங்களாக உள்ளது” எனப் பேசினார்.
பேரரசு: இவரது இந்தப் பேச்சு பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது. மேலும் இந்த இரண்டு படங்களும் இயக்குநர் பேரரசு இயக்கத்தில் உருவான படங்கள். விஜய்யின் அரசியல் வருகை குறித்து ஆ.வி. உதயகுமாரின் பேச்சு இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது. அதற்கு விஜய்யின் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை கமெண்ட்டுகளாக பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











