வெற்றிப்பெற வெற்றிப்பெற பணிவு வேண்டும்.. நெல்சன் திலிப்குமார் பற்றி ஆர்.வி.உதய குமார் பேச்சு!
சென்னை: தலைக்கனம் இருக்கக் கூடாது, வெற்றிப்பெற வெற்றிப்பெற பணிவு வேண்டும் என மேடையில் பேசிய ஆர்.வி. உதயகுமார் பீஸ்ட் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் பற்றி சொன்ன விஷயம் பரபரப்பை கிளப்பி உள்ளது.
சின்னக் கவுண்டர், எஜமான், சிங்கார வேலன் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கியவர் இயக்குநர் ஆர்.வி. உதயகுமார்.
சமீபத்தில் நடைபெற்ற சினிமா நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் இயக்குநர் நெல்சன் பற்றி மேடையில் பேசி உள்ளார்.

வேறமாறி வளர்ச்சி
விஜய் டிவியில் ஷோ ப்ரொட்யூசராக பணியாற்றி வந்த நெல்சன் திலீப்குமார், சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை இயக்க முயன்றார். ஆனால், அந்த படம் டிராப் ஆனது. தொடர்ந்து விடா முயற்சியுடன் உழைத்து வந்த இயக்குநர் நெல்சன் திலீப்குமார் நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா இயக்கி வெற்றி கொடுத்தார். தொடர்ந்து சிவகார்த்திகேயன் உடன் டாக்டர், விஜய்யுடன் பீஸ்ட் அடுத்ததாக ரஜினியுடன் தலைவர் 169 என அவரது வளர்ச்சி அவர் சொல்வதை போலவே வேறமாறி வேறமாறி வளர்ச்சியாக மாறி உள்ளது.

பெரிய எதிர்பார்ப்பு
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனை சிரிக்க வைக்காமல் ரசிகர்களை சிரிக்க வைத்து மிகப்பெரிய ஹிட் கொடுத்த நெல்சன் அடுத்ததாக விஜய்யின் பீஸ்ட் ரிலீசாக உள்ள நிலையில், நெல்சன் மீது விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் நம்பிக்கையும் வைத்திருக்கிறது. நிச்சயம் அதை காப்பாற்றுவார் நெல்சன் என்றே தெரிகிறது.

ஆர்.வி. உதயகுமார்
சின்னக் கவுண்டர், எஜமான், சிங்கார வேலன், பொன்னுமணி உள்ளிட்ட ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான ஆர்.வி. உதயகுமார் சமீபத்தில் நடந்த "கற்றது மற" எனும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, இயக்குநர் நெல்சன் பற்றியும் அவர் பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

தலைக்கனம் கூடாது
படத்தின் டைட்டில் "கற்றது மற" அது தொடர்பாக பேசும் போது இயக்குநர் ஆர்.வி. உதயகுமார் கற்ற நல்ல விஷயத்தை மறக்கக் கூடாது என்றார். மேலும், வெற்றிப்பெற வெற்றிப்பெற பணிவு வேண்டும் தலைக்கனம் இருக்கக் கூடாது எனக் கூறிய அவர் பீஸ்ட் படத்தின் இயக்குநர் நெல்சன் பற்றிய ஒரு சுவாரஸ்ய சம்பவத்தையும் பகிர்ந்து கொண்டார்.

நெல்சன் எப்படிப்பட்டவர் தெரியுமா
இப்போ கிளம்பி வரும் போது தம்பி ஒருத்தர் போன் பண்ணியிருந்தார் எடுத்தேன். அண்ணே வணக்கம்னே.. டைரக்டர் யூனியன்ல கார்டு வாங்கிட்டேன்ணே.. கார்டு நல்லா சூப்பரா நயத்துடன் இருக்குன்னு சொன்னாரு.. சரி தம்பி நீ யாருப்பான்னு கேட்டேன்.. நான் தான் சார் நெல்சன்.. இப்போதான் விஜய் படம் ஒண்ணு பண்ணியிருக்கேன்னு சொன்னாரு.. எவ்வளவு பணிவா இருக்காங்க பாருங்க.. நெல்சனை மாதிரி இயக்குநர்களை நான் போற்றவும் பாராட்டவும் கடமைப்பட்டிருக்கிறேன். எந்த இடத்துக்கு போனாலும், வந்த இடத்தை மறந்துடக் கூடாது என இயக்குநர் உதயகுமார் நெல்சனை பற்றி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











