Vijay - விஜய் வீட்டில் சோகம்.. அந்த சத்தம் இன்னும் கேட்குது.. எஸ்.ஏ.சந்திரசேகர் உருக்கம்

சென்னை: Vijay (விஜய்) விஜய் வீட்டில் நடந்த சோகமான நிகழ்வு குறித்து எஸ்.ஏ.சந்திரசேகர் சமீபத்திய பேட்டியில் உருக்கமாக பேசியிருக்கிறார்.

கோலிவுட்டின் டாப் 3 ஹீரோக்களில் ஒருவர் விஜய். சினிமாவில் நடிக்க வந்த புதிதில் ஏகப்பட்ட விமர்சனங்களையும் கிண்டல்களையும் சந்தித்த அவர் இளைய தளபதியாக வளர்ந்து தற்போது தளபதியாக மாறி நிற்கிறார். அதற்கு ஒரே காரணம் அவரது உழைப்புதான். தன் மீது தொடுக்கப்பட்ட அத்தனை விமர்சன அம்புகளையும் எதிர்கொண்டு திறமையை வளர்த்து தற்போது தனி சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

Director S.A.Chandrasekar Talks about Vijay And Daughter Vidya

100 கோடி ரூபாய்: அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பீஸ்ட், வாரிசு, லியோ ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இருந்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக அந்தந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றன. அதன்படி அந்த மூன்று படங்களுமே வரிசையாக 100 கோடி ரூபாயை தாண்டி வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த சூப்பர் ஸ்டார்: இதன் காரணமாக அடுத்த சூப்பர் ஸ்டார் எங்கள் தளபதிதான் என்று விஜய் ரசிகர்கள் தொடர்ந்து கூறினர். இதனையொட்டி ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்கும் பஞ்சாயத்தும் ஆரம்பித்தது. ஆனால் லியோ படத்தின் சக்சஸ் மீட்டில் விஜய்யின் பேச்சு அந்த பஞ்சாயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது என்றே கூற வேண்டும்.

தளபதி 68: அவர் இப்போது தனது 68ஆவது படத்தில் நடித்துவருகிறார். படத்தை வெங்கட் பிரபு இயக்க; ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் சமீபத்தில்தான் தொடங்கியது. முதலில் சென்னையில் ஆரம்பித்த படப்பிடிப்பு அடுத்ததாக பாங்காக்கில் நடந்தது. விஜய்யும் தனது முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு சென்னை திரும்பியிருக்கிறார்.

விஜய் வீட்டில் சோகம்: இந்நிலையில் விஜய்க்கு பக்கபலமாக இருந்த எஸ்.ஏ.சந்திரசேகர் தங்களது வீட்டில் நடந்த சோகமான நிகழ்வு குறித்து உருக்கமாக பேசியிருக்கிறார். அவர் அளித்த பேட்டி ஒன்றில், “எங்களது மகள் வித்யாவை இழந்தது மிகப்பெரிய இழப்பு. விஜய்யை அவள் டேய் அண்ணா என்றுதான் அழைப்பார். ஒரு நாள் பேசிக்கிட்டே இருக்கும்போது போய் வருகிறேன் என்று சொல்லி அவளை தூக்கினேன்.

ரத்தம்: அப்போது வாயிலிருந்து ரத்தம் வந்தது. அப்படியே தூக்கிக்கொண்டு கோயில், குளம் என கூட்டிக்கொண்டு அலைந்தோம். ஏனெனில் டாக்டர் வந்து பார்த்துவிட்டு முடியவே முடியாது என்று கையை விரித்துவிட்டார். எனது மடியில்தான் வைத்திருந்தேன். அவள் உயிர் பிரிந்ததும் விஜய், 'வித்யா’ என சத்தம் போட்டான். அப்படி அவன் சத்தம் போட்டதே இல்லை. அந்த சத்தம் இன்னும் எனது காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது. அப்போது விஜய்க்கு 10 வயது. அவனால் தனது தங்கையை இழந்ததை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை” என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X