அவர்கள் ஒருநாள் வருத்தப்படுவார்கள்... என்ன இப்படி சொல்லிட்டாரு அட்லி... குழப்பத்தில் ரசிகர்கள்

சென்னை : இயக்குநர் அட்லி விஜய், ஆர்யா உள்ளிட்டவர்களை கொண்டு படங்களை இயக்கி இந்திய அளவில் சிறப்பான டைரக்டராக உள்ளார்.

இவர் தற்போது நடிகர் ஷாருக்கானை வைத்து இந்தியில் படமியக்கவுள்ளார். இந்த படத்திற்கு தற்காலிகமாக லயன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது இவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட் ரசிகர்களை குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

இயக்குநர் அட்லி

இயக்குநர் அட்லி

இயக்குநர் அட்லி ராஜா ராணி படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். முதல் படத்திலேயே தன்னை சிறப்பான இயக்குனராக அவர் வெளிப்படுத்தினார். ஆர்யா மற்றும் நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இவரது முதல் படத்திலேயே நடித்திருந்தனர். இந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

விஜய்யை இயக்கிய அட்லி

விஜய்யை இயக்கிய அட்லி

இதையடுத்து விஜய் நடிப்பில் தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் ஹாட்ரிக் வெற்றி பெற்றது. ரசிகர்களும் இந்த படங்களை கொண்டாடினர் வசூல் ரீதியாகவும் சிறப்பான படங்களாக அமைந்தன. விஜய்யின் முக்கியமான படங்களின் லிஸ்டில் இந்தப் படங்கள் சேர்ந்தன.

பாலிவுட்டில் அட்லி

பாலிவுட்டில் அட்லி

தற்போது பாலிவுட்டிலும் தனது காலடியை பதிக்க காத்திருக்கிறார் அட்லி. தற்போது பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து தனது அடுத்தப் படத்தை திட்டமிட்டு வருகிறார். இந்தப் படத்திற்கு தற்காலிகமாக லயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் நயன்தாரா அல்லது சமந்தா இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இரட்டை வேடத்தில் ஷாருக்

இரட்டை வேடத்தில் ஷாருக்

இந்தப் படத்தில் ஷாருக்கான் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் கதையில் அட்லி சில மாற்றங்களை செய்ய ஷாருக்கான் சொல்லி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அல்லு அர்ஜுனுடன் அட்லி

அல்லு அர்ஜுனுடன் அட்லி

இந்தப் படத்தை அடுத்து தெலுங்கில் அல்லு அர்ஜுன் லீட் கதாபாத்திரத்தில் நடிக்க தனது அடுத்த படத்தை இயக்க உள்ளார் அட்லி என்ற தகவல்களும் வெளியாகி வருகின்றன. தற்போது புஷ்பா இரண்டாவது பாகத்தில் சுகுமார் இயக்கத்தில் நடித்து வருகிறார் அல்லு அர்ஜுன். இதையடுத்து அவர் அட்லியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைதளங்களில் பிசி

சமூக வலைதளங்களில் பிசி

அல்லு அர்ஜுனிடம் அட்லி ஒரு கதையை கூறியதாகவும் அது அல்லு அர்ஜுனுக்கு மிகவும் பிடித்து போனதால் உடனடியாக அவருக்கு ஓகே சொன்னதாகவும் கூறப்படுகிறது. அடுத்தடுத்து சிறப்பான நடிகர்களுடன் இணைய உள்ளார் அட்லி. இந்நிலையில் அவர் சமூக வலைதளங்களிலும் மிகவும் பிசியாக காணப்படுகிறார். அவ்வப்போது தனது மனைவியுடன் இணைந்து அவர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

Recommended Video

நான் பிழை... நீ மழலை... மனைவியுடன் அட்லி ரொமான்ஸ் பதிவு! - வீடியோ
வருத்தப்படும் காலம் வரும்

வருத்தப்படும் காலம் வரும்

இந்நிலையில் அட்லி தனது இன்ஸ்டாகிராம் போஸ்டில் சிலர் உங்களை ஏன் தவறாக நடத்தினார்கள் என்று வருத்தப்படும் காலம் உங்களது வாழ்வில் வரும், என்னை நம்புங்கள் கண்டிப்பாக வரும் என்று பதிவிட்டுள்ளார். அவர் இந்தப் பதிவின் மூலம் யாரை மறைமுகமாக குறிப்பிடுகிறார் என்று குழப்பத்தில் ரசிகர்கள் உள்ளனர். அவர் மறைமுகமாக ஷாருக்கானை குறிப்பிடுகிறாரா என்றும் யோசித்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X