»   »  'சினிமாவை அழிக்கும் விஷக் கிருமி'... சென்சார் அதிகாரியை எதிர்த்து இயக்குநர் உண்ணாவிரதம்!

'சினிமாவை அழிக்கும் விஷக் கிருமி'... சென்சார் அதிகாரியை எதிர்த்து இயக்குநர் உண்ணாவிரதம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தணிக்கை அதிகாரி மதியழகன் தமிழ் சினிமாவை அழிக்க வந்த விஷக் கிருமி என்று கண்டித்துள்ள இயக்குநர் தியா, நாளை அவருக்கு எதிராக உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார்.

மெஹெக் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரூபேஷ்.பி மற்றும் எஸ்.எஸ்.பிக் சினிமாஸ் சார்பில் இ.சிவசுப்பிரமணியன் மற்றும் கேஆர் சீனிவாஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'கன்னா பின்னா'.

இந்தப் படத்தின் இயக்குநர் தியா. நாளைய இயக்குநர் குறும்படப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றவர். இந்தப் படத்தை இயக்கியுள்ளதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கிறார்.

Director's fasting against regional censor officer

இந்தப் படத்துக்கு உரிய சென்சார் சான்றிதழ் பெறப் போராடி வருகிறார் தியா. தன்னை சென்சார் அதிகாரி அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டிய தியா, மதியழகனுக்கு எதிராக உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அவர் கூறுகையில், "ஜனரஞ்சகமான காமெடி படத்தையே நான் இயக்கியுள்ளேன். அதுவும் சென்சார் விதிகளுக்கு உட்பட்டுத்தான். ஆனால் தணிக்கை அதிகாரியான மதியழகன், இந்தப்படத்திற்கு 'யு/ஏ' சான்றிதழ்தான் தருவேன் எனkd கூறியதோடு, விளக்கம் கேட்ட என்னை அவமானப்படுத்தி வெளியே நிற்கவைத்துவிட்டு, படத்தின் தயாரிப்பாளரிடம் பேரம் பேசுகிறார்

தணிக்கை என்கிற அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு சினிமாவை அழிக்கவந்த விஷக்கிருமி என்று அதிகாரி மதியழகனைச் சொன்னால், அதுதான் சரியான வார்த்தையாக இருக்கும். நியாயமான என்னுடைய எந்த கேள்விகளுக்கும் அவரால் பதில் சொல்ல முடியவில்லை. காரணம் ஒருதலைபட்சமாகவே அவர் நடந்துகொள்கிறார்.

அதனால் எனக்கு நியாயம் கேட்டும், தணிக்கை அதிகாரி மதியழகனின் இந்த அராஜாக போக்கை கண்டித்தும் நாளை காலை 10 மணியளவில் சாஸ்திரி பவன் முன்பாக உண்ணாவிரதம் இருக்கப் போகிறேன்... இந்த உண்ணாவிரதத்துக்காக கமிஷனரிடம் அனுமதி கேட்டும், எனக்கு கிடைக்கவில்லை..

இதுபற்றி தயாரிப்பாளர் சங்க (கில்டு) தலைவரும் திரைப்பட தயாரிப்பாளர், இயக்குநரும் ஸ்டண்ட் மாஸ்டருமான ஜாக்குவார் தங்கத்திடம் பேசினேன்.. அவரும் இந்த உண்ணாவிரதத்துக்கு தனது ஆதரவை தந்துள்ளார்.. நாளை காலை அவரது தலைமையில் தான் இந்த உண்ணாவிரதத்தை மேற்கொள்ள இருக்கிறோம்" என கூறியுள்ளார்.

இதுபற்றி ஜாக்குவார் தங்கம் கூறியதாவது, "இயக்குனர் தியா சொல்வது நூற்றுக்கு நூறு சரி.. அவர் மட்டுமல்ல, சிறிய பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் பலரும் தணிக்கை அதிகாரி மதியழகனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல கோடி ரூபாய் மதிப்பிலான படங்கள் ரிலீசாகாமல் முடங்கியுள்ளன.. அவ்வளவு ஏன் நான் எடுத்திருக்கும் படத்தின் ட்ரெய்லரில் சிறுவர்கள் நம் தேசிய கொடியை பிடித்தபடி நிற்கும் காட்சி இருப்பதால், அதை காரணம் காட்டி சென்சார் சான்றிதழ் தர மறுத்துவிட்டார்..

நம் சிறுவர்கள், நம் தேசிய கொடியை பிடிக்காமல் பாகிஸ்தான் தேசிய கொடியையா பிடிக்க முடியும்.. அந்த அளவுக்கு தணிக்கை அதிகாரி மதியழகன் எதேச்சதிகார போக்குடன் செயல்படுகிறார்.. சிறிய பட்ஜெட் படங்களே வரக்கூடாது என அவர் நினைக்கிறார். பெரிய படங்களுக்கு மட்டும் ஆதரவாக நடந்துகொள்கிறார். இந்தநிலைக்கு ஒரு முடிவுகட்ட நாங்களும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.. அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த உண்ணாவிரத்தில் பங்கேற்கிறேன்," என கூறியுள்ளார்..

English summary
Dhiya, director of Kanna Pinna movie has announced a fast against Censor officer Mathiyazhagan for insulting him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil