twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தவறு எங்கு நடக்கிறதோ அங்கு எம்.ஜி.ஆர் தலையிட்டு சரி செய்வார் - எஸ்.பி.முத்துராமன்

    |

    சென்னை: அன்பே வா திரைப்படத்தில் எம்ஜிஆருடன் பணிபுரிந்த போது நடந்த சுவாரஸ்யமான அனுபவங்களை இயக்குநர் எஸ்.பி. முத்துராமன் பகிர்ந்து கொண்டுள்ளார். சினிமாவைப் பற்றி எம்.ஜி.ஆருக்கு நன்கு தெரியும் அவர் ஒரு டெக்னிஷியனாக இருந்ததால்தான் எப்போது ஒரு தவறு நடக்கிறதோ அதை திருத்தி சரி செய்வார், அதற்கு பெயர் தலையிடுதல் இல்லை என்று கூறியுள்ளார் எஸ்.பி.முத்துராமன் , தன்னுடைய அனுவங்களை பகிர்ந்தார் எஸ். பி. முத்துராமன்.

    1970ஆம் ஆண்டுகளில் திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய பல இயக்குனர்களில் ஒருவர் எஸ்.பி.முத்துராமன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 75க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

    Director S.P.Muthuraman shares M.G.Rs Anbe vaa memories

    சிவாஜி கணேசன், கமலஹாசன், ஜெய்ஷங்கர், விஜயகாந்த், சத்யா ராஜ், கார்த்திக், பிரபு, முத்துராமன் போன்ற பல நடிகர்களை இயக்கிய இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் திரைவாழ்வை வடிவமைத்ததில் பெரும் பங்கு எஸ்.பி. முத்துராமன் அவர்களையே சேரும். மேலும் ரஜினிகாந்த்தை வைத்து அதிகமான படங்களை தயாரித்துள்ள பெருமை இவரையே சேரும்.

    எஸ்.பி. முத்துராமன் தமிழ் திரையுலகில் அனைவராலும் போற்றப்படுவதற்கு சிறந்த இயக்குனர் என்பதையும் தாண்டி அவர் சிறந்த பண்பாளர்.
    எஸ்.எஸ்.எல்.சி படித்த அவர், சினிமா துறையில் இருந்த ஆர்வத்தால் கவிஞர் கண்ணதாசன் அவர்களில் தென்றல் பத்திரிகையில் சேர்ந்தார். பின்பு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் மூலம் திரையுலகில் எடிட்டிங் துறையில் பயிற்சி பெற்றார்.

    Director S.P.Muthuraman shares M.G.Rs Anbe vaa memories

    கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படம் மூலம் துணை இயக்குனராக பணியாற்றி அப்படத்தின் தெலுங்கு படைப்பை அவர் முழுவதுமாக எடிட் செய்தார். தனது முதல் படத்திலேயே இரண்டு இயக்குனருடன் பணியாற்றியுள்ளார்.

    எஸ். பி. முத்துராமன் தனது குருவாக ஏற்றுக்கொண்டது ஏ.சி.திருலோகச்சந்தர் அவர்களை தான். பல இயக்குனர்களுடன் பணிபுரிந்தாலும், தன் குரு மூலமாக தான் இயக்கம், தொழிநுட்பம் போன்ற அனைத்தையும் அவர் மூலமாகவே கற்றுக்கொண்டார்.

    Director S.P.Muthuraman shares M.G.Rs Anbe vaa memories

    ஏ.வி.எம்மிற்காக ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கிய பதினாறு படங்களிலுமே எஸ்.பி. முத்துராமன் தான் துணை இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவர் மிகவும் கண்டிப்பானவர் கம்பீரமானவர். அவரை குருவாக ஏற்றதை பெருமையாக கருதுகிறார். அந்த வகையில் 1966ஆம் ஆண்டில் ஏ.வி.எம் தயாரிப்பில், ஏ.சி.திருலோகச்சந்தர் இயக்கத்தில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படம் தான் அன்பே வா.

    சைமா விருது வாங்கிய அப்பா மகன் - கொண்டாட்டத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள் சைமா விருது வாங்கிய அப்பா மகன் - கொண்டாட்டத்தில் ஜெயம் ரவி ரசிகர்கள்

    எம்.ஜி.ஆருக்கு இது ஒரு வித்தியாசமான படம். இப்படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த எஸ்.பி.முத்துராமனுக்கும், புரட்சி தலைவருக்கும் இடையே நல்ல நட்பு இருந்தது. புரட்சி தலைவர் தனது கருத்தை படப்பிடிப்பின் போது தெரிவிப்பார் என்பதை அறிந்த எஸ். பி. முத்துராமன் ஒரு நாள் தனது துணை இயக்குனர் மூலம் ஏம்.ஜி.ஆரிடம் அவர் ஏன் இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போது எந்த ஒரு தலையீடும் செய்வதில்லை என்று கேட்டுள்ளார்.

    Director S.P.Muthuraman shares M.G.Rs Anbe vaa memories

    அதற்கு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பில் இருந்த அனைவரையும் அழைத்து தான் எப்போதும் தலையிடுவதில்லை. தானும் ஒரு டெக்னிஷனாக இருப்பதால் எப்போது ஒரு தவறு நடக்கிறதோ அதை திருத்தி சரி செய்வேன். அதற்கு பெயர் தலையிடுதல் இல்லை என்று பதிலளித்தார். இப்படத்தை இயக்குவது ஏசி.திருலோகச்சந்தர் என்பதாலும், அவர் அனைத்தையுமே சரியாக நடத்துவதால், நான் தலையிடவேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றார் எம்.ஜி.ஆர்.

    திட்டமிடுதல், சரியான நிர்வாகம், புத்திகூர்மை, ஞாபக சக்தி இவை அனைத்தும் எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றிக்கு அடித்தளம் அமைத்தவை என்று தன்னுடைய அனுவங்களை பகிர்ந்தார் எஸ். பி. முத்துராமன்.

    English summary
    Since MGR is a technician, it always corrects when something goes wrong and does not interfere with the name. SP Muthuraman shared his experiences with MGR.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X