பிரபாஸ் மிகவும் சோம்பேறி; பாகுபலியை பங்கமாக்கிய ராஜமௌலி!

By mohanraj

சென்னை: இந்திய சினிமாவே தற்போது உற்று நோக்கும் கதாநாயகனாக மாறிவிட்டார் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும், அதன் பின்னர் வெளியான சலார் படத்தின் முதல் பாகமும் பிரபாஸின் மார்கெட்டை உயர்த்திவிட்டது. இதனால் ஒரு பான் இந்தியா கதாநாயகனாகவே மாறிவிட்டார். தற்போது இவரது நடிப்பில் வெளியாக தயாராக உள்ள படம் கல்கி 2898 ஏ.டி. படத்தின் அறிவிப்பில் இருந்தே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்தது. படம் குறித்த ஒவ்வொரு அப்டேட் வரவர ரசிகர்களுக்கு படத்தின் மீதான ஆர்வம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

Rajamouli Prabhas Marriage Prabhas Kalki 2898 A D 2898

நாக் அஸ்வின் இயக்கியுள்ள கல்கி 2898 ஏ.டி படத்தை வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ஒட்டுமொத்த இந்திய சினிமாவில் உள்ள மிகப்பெரிய ஸ்டார்கள் நடிப்பில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், நடிகர்களுக்கான சம்பளத்திற்கே அதிகப்படியான பணத்தை தயாரிப்பு நிறுவனம் கொடுத்துள்ளது. கல்கி 2898 ஏடி படத்தில் பிரபாஸூடன், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன், உலக நாயகன் கமல் ஹாசன், அதிரடிக்கு பெயர்போன நடிகை தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பென் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படத்தின் ட்ரைலர் கடந்த 10ஆம் தேதி வெளியானது. படம் வரும் 27ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Rajamouli Prabhas Marriage Prabhas Kalki 2898 A D 2898

எப்படி இருக்கு ட்ரைலர்: ட்ரைலரைப் பார்க்கும்போது கடவுள் சக்திக்கும் அறிவியல் சக்திக்கும் இடையில் ஏற்படும் போரைப் போல் இருக்கின்றது. ட்ரைலரின் இறுதியில் வரும் கமல் ஹாசன் பேசும் வசனமும் அவருக்கான மேக்கப்பும் ஆச்சரியப்படவைக்கின்றது. குறிப்பாக அவர் பேசும் வசனமான, " பயப்படாதே, இன்னொரு பிரபஞ்சம் வருகின்றது என்ற வசனமும், அதற்கு வைக்கப்பட்டுள்ளா க்ளோசப் ஷாட்டும் ஒரு நிமிடம் திரும்பிப் பார்க்க வைக்கின்றது. குறிப்பாக ட்ரைலரில் வரும் வசனங்கள், பூமியில் தண்ணீர் தீர்ந்த பின்னர் பூமியை விட்டு வெளியேறிய மக்கள் மீண்டும் பூமிக்கு வந்து பாக்கும்போது அங்கிருப்பவர்களுடன் பேசிக்கொள்வதைப் போலும் அவர்களுடன் மோதிக்கொள்வதைப் போலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தில் லேயர் லேயராக இரண்டு மூன்று கதைகள் பின்னிப் பிணைந்து இருப்பதை உணர முடிகின்றது.

Rajamouli Prabhas Marriage Prabhas Kalki 2898 A D 2898

சோம்பேறி பிரபாஸ்: இப்படி இந்திய திரையுலமே எதிர்நோக்கி காத்திருக்கும் படத்தில் மிகுந்த சிரத்தை எடுத்து நடித்துள்ள பிரபாஸை, இயக்குநர் ராஜமௌலி சோம்பேறி எனக் கூறியுள்ளார். இது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரபாஸ் திருணம குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்க ராஜமௌலி பேசுகையில், " பிரபாஸ் ஒரு சோம்பேறி. திருமணம் செய்து கொளவதிலும் சோம்பேறியாக உள்ளார். தனக்கான பெண்ணைத் தேர்வு செய்து அவரது பெற்றோர் இடத்தில் பேசுவது பிரபாஸுக்கு பெரிய வேலையாக இருக்கும். அதனால்தான் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கின்றார்" என பதில் அளித்துள்ளார்.

Rajamouli Prabhas Marriage Prabhas Kalki 2898 A D 2898

ஏற்கனவே நடிகர் பிரபாஸ் தன்னைத் தானே சோம்பேறி என்றும், கூச்ச சுபாவம் கொண்டவர் என்றும் இதனால் தான் மக்களை சந்திக்க அதிகம் வெளியே வருவதில்லை என்றும் கூறியுள்ளார். ஆனால் எனது சோம்பேறித் தனங்கள் எல்லாம் கேமராவுக்கு முன்னாள் கிடையாது எனவும் நடிகர் பிரபாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X