காஸ்ட்லி கார் வாங்கிய ராஜமௌலி… விலை எவ்வளவுனு தெரிஞ்சா மயக்கமே வரும் !
சென்னை : இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி காஸ்ட்லி கார் ஒன்றை வாங்கிய உள்ளார்.
ராஜமௌலி இயக்கத்தில் உருவான ஆர்ஆர்ஆர் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்துள்ளது. அந்த படத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் , ஸ்ரேயா, அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலில் சாதனை படைத்துள்ளது.

எஸ் எஸ் ராஜமெளலி
இந்திய சினிமாவின் முக்கிய இயக்குநராக உருவெடுத்திருக்கிறார் ராஜமெளலி. சிம்ஹாத்ரிக்கு பிறகு 2004-ல் ஷை, 2005ல் சத்ரபதி, 2006-ல் விக்ரமாகுடு, 2007-ல் எமதொங்கா, 2009-ல் மகதீரா, 2010-ல் மரியாதை ராமண்ணா, 2012-ல் ஈகா இப்படம் தமிழில் ஈ என்ற பெயரில் வெளியானது. 2015 மற்றும் 2017-ல் பாகுபலியின் இரண்டு பாகங்கள் என இதுவரை 9 படங்கள் இயக்கிவிட்டார். அனைத்துப் படங்களும் பாக்ஸ் ஆஃபீஸில் கோடிகளை வாரிக்குவித்தன.

அனைத்து படங்களும் ஹிட்
ராஜமௌலி இயக்கிய அனைத்து படங்களையும் வெற்றியாக கொடுத்த ஒரே ஒரு இயக்குநர் ராஜமௌலி மட்டுமே. இத்தனைப் படங்களின் வெற்றிக்கு காரணம் அவரின் திரைக்கதையும், அவர் எடுக்கும் ரிஸ்க்கும்தான். இதுபோன்ற ரிஸ்க் எடுக்க காரணம் தனது திரைக்கதை மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைதான்.

சொகுசு கார்
இந்நிலையில் தற்போது ராஜமௌலி ஒரு சொகுசு காரை வாங்கி இருக்கிறார். அவர் புது Volvo XC40 SUV காரை வாங்கி இருப்பதாக வால்வோ நிறுவனமே அறிவித்து இருக்கிறது. அந்த காரின் விலை தோராயமாக 52 லட்சம் ரூபாயாகும். இந்த காரை வாங்கி ராஜமௌலிக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Volvo XC40 SUV சிறப்பு
ராஜமௌலி Volvo XC40 SUV காரை வாங்கியதை அடுத்து, ரசிகர்கள் இந்த காரில் இருக்கும் சிறப்புகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர். ஐந்து பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய வகையில் இருக்கைகளும், தண்ணீர் பாட்டில்கள், ஜிம் பைகள், மடிக்கணினிகள் வைத்துக்கொள்ள ஸ்மார்ட் ஸ்டோரேஜ்களும் உள்ளன. மேலும், நின்றபடி வெளியுலக ரசித்து சொல்ல காரின் மேல் பகுதியில் ஒரு ஜன்னல் அமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











