Don't Miss!
- News சென்னையில் பயங்கரம்.. பிரபல ‛பப்’ மேற்கூரையின் இடிந்து விழுந்தது.. 2 பேர் பலி.. மீட்பு பணி தீவிரம்
- Sports RR vs DC : 36-3.. திடீரென உள்ளே புகுந்த அஸ்வின்.. அடுத்தடுத்து பறந்த சிக்சர்கள்.. தப்பிய ராஜஸ்தான்!
- Automobiles உலகமே எதிர்பார்த்த சியோமி மின்சார கார் விற்பனைக்கு வந்தாச்சு! அதோட செல்போன்களை போலவே இதோட விலையும் ரொம்ப கம்மி
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Lifestyle முட்டை வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... இல்லனா பல ஆபத்துக்களை சந்திக்க வேண்டியிருக்கும்...!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மீண்டும் பக்தியை நிரூபித்த டைரக்டர்... அண்ணாத்த ரஜினியின் கேரக்டர் பெயர் இது தான்
சென்னை : டைரக்டர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் அண்ணாத்த. ரஜினி நடித்த எந்திரன், பேட்ட படங்களின் மாஸ் வெற்றியை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள படம் இது.
Recommended Video
சைமா விழாவில் 7 விருதுகள்.. தட்டித்தூக்கிய சூரரைப்போற்று டீம்.. குவியும் வாழ்த்துகள்!
அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சதீஷ், சூரி, டைரக்டர் சிவாவின் சகோதரர் பாலா உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். இமான் இசையமைத்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தியில் ஃபஸ்ட்லுக்
அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாக இருக்கும் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் மோஷன் போஸ்டர் ஆகியன விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 10 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து படத்தின் ஃபஸ்ட், செகண்ட் மற்றும் மூன்றாவது சிங்கிள் வெளியிடப்பட்டன. இரண்டு நாட்களுக்கு முன் டீசரும் வெளியிடப்பட்டது.
அண்ணாத்த படத்திற்கு யு/ஏ சான்று
நவம்பர் 4 ம் தேதி தீபாவளியன்று ரிலீசாக உள்ள அண்ணாத்த படத்திற்கு சென்சார் போர்டு யு/ஏ சான்று வழங்கி உள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷை போல் குஷ்பு மற்றும் மீனாவும் ரஜினியின் சகோதரிகளாக நடித்துள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் விதமாக மருதாணி பாடல் மூன்றாவது சிங்கிளாக வெளியிடப்பட்டது.
ரஜினி கேரக்டர் பெயர்
லேட்டஸ்ட் தகவலாக அண்ணாத்த படத்தில் ரஜினியின் கேரக்டர் பெயர் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் கிராமத்து தலைவராக வரும் ரஜினியின் கேரக்டர் பெயர் கணேசன். இதனால் டைரக்டர் சிவா, தான் விநாயகர் பக்தர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். சிவாவின் முந்தைய படங்களிலும் ஹீரோவின் பெயர் விநாயகருடன் தொடர்புடையதாகவே வைக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் வி சென்டிசென்ட்
அஜித்திற்கு வி சென்டிசென்ட் உருவாக்கியவர் டைரக்டர் சிவா தான். இவர் அஜித்தை வைத்து வீரம், வேதாளம் படங்களை இயக்கினார். இந்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆனதால் இதை பின்பற்றி தான் பிறகு அஜித் நடித்த படங்களுக்கு விவேகம், வலிமை என டைட்டில் வைக்கப்பட்டது.
அஜித்தை தொடர்ந்து ரஜினி
வீரம் படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் விநாயகம். அதே போல் வேதாளம் படத்தில் அஜித்தின் பெயர் கணேசன். இப்போது அண்ணாத்த படத்திலும் ரஜினி கேரக்டருக்கு கணேசன் என்ற பெயரையே வைத்துள்ளார் டைரக்டர் சிவா. இதனால் வீரம், வேதாளம் படங்களை விட அண்ணாத்த பெயரி அளவில் பேசப்படும் மாஸ் ஹிட் கொடுக்கும் என படக்குழு நம்புகிறது.