உழைப்பால் மட்டுமா விஜய் உயர்ந்துவிட்டார்?.. எஸ்.ஏ.சந்திரசேகர் பளீச்
ராமேஸ்வரம்: நடிகர் விஜய் குறித்தும் அவரது வெற்றி குறித்தும் அவரின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருக்கிறார்.
நடிகர் விஜய் முன்னணி நடிகர்களில் ஒருவர். இவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் பல நூறு கோடி ரூபாய் பிஸ்னஸ் ஆகக்கூடியவை. தளபதி என அழைக்கப்படும் விஜய்க்கு பலர் இந்தியா முழுவதும் ரசிகர்கள் இருக்கின்றனர். தமிழ்நாட்டில் அவருக்கு ரசிகர்கள் இருக்கும் அளவுக்கு கேரளாவிலும் இருக்கின்றனர். சமீபத்தில்கூட நடந்த நீயா நானா நிகழ்ச்சியில் சூடான் நாட்டிலிருந்து வந்திருந்த ஒருவர் தான் விஜய்யின் தீவிர ரசிகர் என கூறியது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு துணை நின்ற தந்தை
1990களில் சினிமாவில் அறிமுமகமான விஜய்க்கு அவரது தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் துணை இருந்தார். ஒருகட்டம் வரை விஜய் படங்களை இயக்கிய அவர் அதற்கு அடுத்ததாக விஜய்க்காக சிறந்த கதைகளை கேட்டு அதில் விஜய் நடிப்பதா வேண்டாமா என முடிவு செய்யும் நிலையில் இருந்தார். காலம் போகப்போக பக்குவமடைந்த விஜய் தனியாளாக ஜொலிக்க ஆரம்பித்தார். இதனையடுத்து எஸ்.ஏ.சி கொஞ்சம் கொஞ்சமாக விஜய்யிடமிருந்து ஒதுங்கினார் அல்லது ஒதுக்கப்பட்டார்.

எஸ்.ஏ.சி செய்த சாமி தரிசனம்
இந்நிலையில் நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அங்குள்ள அக்னி தீர்த்த கடலில் நீராடிய பிறகு குடும்பத்தின் நலனுக்காக கும்பம் வைத்து சிறப்பு வழிபாடு செய்தார். மேலும் 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடவும் செய்தார்.

விஜய்யின் வளர்ச்சிக்கு உழைப்பா காரணம்?
பிளாட்பாரத்தில் இருந்த என்னை இந்த அளவுக்கு உயர்த்தியது இறைவன்தான். எங்கெல்லாம் சிவன் கோயில் இருக்கிறதோ அங்கெல்லாம் தரிசனம் செய்வது மனநிறைவை தருகிறது. உழைத்தவர் எல்லாம் உயர்ந்ததில்லை. அந்த வகையில் என்னை உயர்த்தியது சிவன். எனது மகன் வளர்ச்சிக்கு காரணம் கடும் உழைப்பு, தன்னம்பிக்கை மட்டுமில்லை. இறைவனின் ஆசீர்வாதமும், எங்களுடைய பிரார்த்தனையும்தான்" என்றார்.

விஜய்க்கும், எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பிரச்னை?
முன்னதாக சில காரணங்களால் விஜய்ய்க்கும் எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் பேச்சுவார்த்தை இல்லை என கூறப்பட்டது. மேலும், சமீபத்தில் தனது தாய், தந்தை பிறந்தநாள் வந்தபோதுகூட விஜய் வந்து நேரில் சந்திக்காதது பெரும் விவாதத்தை கிளப்பியது. அதேபோல் தனது தந்தை, தாய் பிரச்னை குறித்து நடிகர் விஜய் நீதிமன்ற படிகளும் ஏறியது நினைவுகுரத்தக்கது.
அதேசமயம் தனக்கும் விஜய்க்கும் எந்தவித பிரச்னையும் இல்லை. ஒருகாலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது நாங்கள் சாதாரணமாகத்தான் இருக்கிறோம் என கூறி இந்தப் பிரச்னைக்கு எஸ்.ஏ.சி முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

லியோவில் விஜய்
விஜய் இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக காஷ்மீரில் நடந்துவருகிறது. இந்தப் படத்தின் ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருக்கும் சூழலில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும், திரையுலகத்தினரிடமும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருக்கிறது.


Click it and Unblock the Notifications











