“ரஜினி மாதிரி அதோட நிறுத்திக்கோங்க..” விஜய் பற்றி பிரபல இயக்குநர் சர்ச்சை பேச்சு.. வைரலாகும் வீடியோ

நடிகர் விஜய் மேடையில் கருத்து எல்லாம் சொல்லக்கூடாது என இயக்குனர் சாமி காட்டமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Director Saamy slam Vijay : ரசிகர்களுக்கு கை கொடுத்து Dettol போட்டு கை கழுவிய விஜய்-வீடியோ

சென்னை: நடிகர் ரஜினி போன்று விஜய்யும் நடிப்பதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும், மேடையில் கருத்து சொல்வதெல்லாம் வேண்டாம் என காட்டமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சாமி.

தமிழில் சிந்து சமவெளி, உயிர், மிருகம் என சர்ச்சைப் படங்களை இயக்கி பிரபலமானவர் இயக்குநர் சாமி. இவர் நடிகர் விஜய்யை விமர்சித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், காட்டமாக விஜய்யின் நடவடிக்கைகள் குறித்து சாமி பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இணையத்தில் அந்த வீடியோ வைரலாகியுள்ளது. அந்த வீடியோவில் சாமி கூறியிருப்பதாவது,

அன்றில் பறவைகள்

அன்றில் பறவைகள்

"நாம் இதுவரை 4 முறைதான் சந்தித்துள்ளோம். 3 முறை வீட்டில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. என்னுடைய பெயர் சாமி. நான் மிருகம், கங்காரு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளேன். 2000-ம் ஆண்டில் உங்களை நேரடியாக சந்தித்து அன்றில் பறவைகள் என்ற குடும்ப பாங்கான கதையைச் சொன்னேன். பிரியமானவளே பட ஷூட்டிங்கில் பிசியாக இருந்த நீங்கள், எனக்காக 2 மணி நேரம் ஒதுக்கி கதையைக் கேட்டீர்கள்.

ரஜினி மாதிரி இருங்க

ரஜினி மாதிரி இருங்க

சினிமாவில் என்ன வேண்டுமானாலும் நடக்கும். அது பிரச்சினை இல்ல. நீங்கள் ரஜினி மாதிரி நடித்துவிட்டு மட்டும் போங்க. வாய் திறந்து பேசாதீங்க பிளீஸ். பிகில் இசை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசுகிறீர்கள், "யார் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு தான் வைக்க வேண்டும்" என. இயற்கையும் கடவுளும் அவரவர்களை அங்கங்கு தான் வைத்திருக்கிறது. நீங்கள் தேவையில்லாமல் பேசி மாட்டிக் கொள்கிறீர்கள்.

நல்லவர்?

நல்லவர்?

நீங்கள் சினிமாவைத் தாண்டி எவ்வளவு நல்லவர் என்பது நன்றாகவே தெரியும். ரசிகர்களைப் பார்த்து என் நெஞ்சில் குடியிருக்கும் என்றெல்லாம் பேசும் நீங்கள், அவர்களிடம் கைகொடுத்துவிட்டு அதை டெட்டால் போட்டு கழுவுகிறீர்கள். அதை நானே நேரில் பார்த்திருக்கிறேன்.

ஏமாற்றாதீர்கள்

ஏமாற்றாதீர்கள்

நீங்கள் எந்தவிதத்தில் ரூ.50 கோடி சம்பளம் வாங்குகிறீர்கள் என்பது எனக்குத் தெரியவில்லை. 60 நாட்கள் நடிக்கிறீர்கள். அதற்கு கருப்பு பணமாக சொத்து வாங்கிக் கொள்கிறீர்கள். இதில் எங்கே நேர்மை, உண்மை இருக்கிறது. மேடையில் மட்டும் ஏன் பொய்யாக பேசுகிறீர்கள். எவ்வளவு நாள் தமிழகத்தை ஏமாற்ற முடியும்.

மாற்றிக் கொள்ளுங்கள்

மாற்றிக் கொள்ளுங்கள்

தயவுசெய்து படத்தில் நடிப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். மேடையில் எல்லாம் கருத்து சொல்ல வேண்டாம். நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடித்துவிட்டு போங்க. வாயைக் கொடுத்து மாட்டிக்காதீங்க. ஒரு நாள் உண்மை வெளியில் வரும். அப்போது நடிப்பவர்கள் எல்லோரும் கேவலப்பட வேண்டி வரும். தயவு செய்து மாற்றிக் கொள்ளுங்கள்" என அதில் சாமி பேசியுள்ளார்.

அதிர்ச்சி

அதிர்ச்சி

ஏற்கனவே பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. விஜய்யின் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனங்களைப் பதிவு செய்தனர். இந்நிலையில் திரைத்துறையைச் சேர்ந்த ஒருவரே விஜய் குறித்து இப்படி காட்டமாக பேசியிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. அதுவும் இயக்குனர் சாமி, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X