“இனி நோ அடல்ஸ் ஒன்லி படங்கள்”... சர்ச்சை இயக்குநர் அதிரடி முடிவு.. ஈரானிய படத்தை ரீமேக் செய்கிறார்?

சில்ட்ரன் ஆப் ஹெவன் படத்தை தமிழில் இயக்குநர் சாமி இயக்கி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

By Staff

சென்னை: உயிர், சிந்து சமவெளி என தொடர்ந்து சர்ச்சைப் படங்களாகத் தந்த இயக்குநர் சாமி, தற்போது தனது ரூட்டை மாற்றி இருக்கிறாராம்.

ஸ்ரீகாந்த், சங்கீதா நடித்த 'உயிர்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சாமி. இப்படத்தைத் தொடர்ந்து, மிருகம், சிந்து சமவெளி போன்ற படங்களை இயக்கினார். இவரது கங்காரு படமும் இந்த பரபரப்பில் இருந்து தப்பவில்லை.

கொழுந்தன் மீது ஆசைப்பட்ட அண்ணி, எய்ட்ஸ் நோயாளி கணவரிடம் சிக்கிய மனைவி, மாமனார் மீது ஆசைப்படும் மருமகள் என இப்படங்கள் அனைத்துமே பெரும் சர்ச்சைகளைக் கிளப்பின. இதில், சிந்து சமவெளி படம் மூலம் தான் நடிகை அமலா பால் தமிழில் அறிமுகாமானார்.

சில்ட்ரன் ஆப் ஹெவன்:

சில்ட்ரன் ஆப் ஹெவன்:

இதனால் சில காலம் இயக்கத்தில் இருந்து விலகி இருந்த சாமி, தற்போது மீண்டும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இப்படம் அவரது முந்தைய படங்களைப் போல் சர்ச்சைப் படமல்ல. அதற்கு மாறாக, பல சர்வதேச விருதுகளை வென்ற ஈரானிய படமான ‘சில்ட்ரன் ஆப் ஹெவன்' என்ற படத்தின் ரீமேக் இது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஜித் மஜிதி படம்:

மஜித் மஜிதி படம்:

உலக சினிமா காதலர்களால் மறக்க முடியாத படம் இது. கடந்த 1997ம் ஆண்டு ரிலீசான இப்படத்தை இயக்குநர் மஜித் மிஜிதி இயக்கியிருந்தார். ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த அண்ணன், தங்கையின் பாசத்தை அழகாக பதிவு செய்த படம் இது. 1998ம் ஆண்டு ஆஸ்கர் விருதுக்குக் கூட இப்படம் பரிந்துரை செய்யப்பட்டது.

அக்கா குருவி:

அக்கா குருவி:

தற்போது இப்படத்தைத் தான், ‘அக்கா குருவி' என்ற பெயரில் சாமி இயக்கி வருவதாகக் கூறப்படுகிறது. கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை பகுதியில் இப்படத்தின் முழுப் படப்பிடிப்பும் நடைபெற்றுள்ளது. மதுரை முத்து மூவிஸ், கனவு தொழிற்சாலை நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் இந்த படத்தைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

உத்பல் நாயனார்:

உத்பல் நாயனார்:

முன்னணி மலையாள ஒளிப்பதிவாளரும் ‘சிந்து சமவெளி'படத்தின் ஒளிப்பதிவாளருமான உத்பல் நாயனாரே இப்படத்திற்கும் ஒளிப்பதிவாளர். படத்தில் அனைவரும் புதுமுகங்கள் எனக் கூறப்படுகிறது.

மே மாத ரிலீஸ்:

மே மாத ரிலீஸ்:

கோடை விடுமுறையை ஒட்டி இப்படம் வரும் மே மாதம் திரைக்கு வர இருக்கிறது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கில் இப்படம் ரிலீசாகிறது. நிச்சயம் இப்படம் மூலம் தன் மீதுள்ள சர்ச்சை இயக்குநர் பட்டத்தை நீக்கி, குழந்தைகளுக்கும் பிடித்த இயக்குநர் என்ற பேரை சாமி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: saamy சாமி
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X