யாக பூஜைக்கு வராத விஜய்.. விளக்கம் அளித்த எஸ்ஏசி.. இதெல்லாம் ஒரு காரணமா?

சென்னை :நடிகர் விஜய் சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளவர். அவரது ஸ்டைலை அவரது ரசிகர்கள் அதிகமாக பாலோ செய்து வருகின்றனர்.

Recommended Video

SA Chandhrasekar சதாபிஷேகம் | Vijay பெயரில் அர்ச்சனை! *TamilNadu | Oneindia Tamil

அவரது ஸ்டைலை மட்டுமில்லாமல் அவருடைய குணாதிசயங்களையும் பாலோ செய்யும் தீவிர ரசிகர்களும் விஜய்க்கு உண்டு.

விஜய்யை ஒரு நடிகராக மட்டுமில்லாமல் தலைவா என்று கொண்டாடி வருகின்றனர்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் அதிகமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். அவரது படங்கள் சர்வதேச அளவில் சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்து வருவது இதற்கு சிறப்பான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. தொடர்ந்து சிறப்பான கதைக்களங்களில் புதுமுக இயக்குநர்களுக்கும் வாய்ப்பளித்து படங்களை கொடுத்து வருகிறார் விஜய்.

வெற்றிக் கொண்டாட்டம்

வெற்றிக் கொண்டாட்டம்

இதுபோல புதுமுக இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு தனது 65வது படமான பீஸ்ட்டில் வாய்ப்பளித்திருந்தார் விஜய். ஆனால் அந்தப் படம் சொதப்பிய போதிலும் வசூலை குவிக்க தவறவில்லை. இதையடுத்து நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு தனது வீட்டில் விருந்தளித்து மகிழ்வித்தார் விஜய். இதன் புகைப்படங்கள் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகின.

சிறப்பான முன்னுதாரணம்

சிறப்பான முன்னுதாரணம்

இவ்வாறு ஒவ்வொருவரின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து வருபவர் விஜய். அவரது ஸ்டைல், படங்கள் மட்டுமில்லாமல் விஜய்யின் குணாதிசயங்களையும் பலர் பாராட்டி பேசுவது இணையதளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. அந்த அளவிற்கு தன்னுடைய வேலையில் டெடிக்கேட்டாகவும் அதிகமாக பேசாத கேரக்டரிலும் விஜய் சிறப்பான முன்னுதாரணமாக காணப்படுகிறார்.

அதிகமான விமர்சனங்கள்

அதிகமான விமர்சனங்கள்

ஆனால் அவர் சமீப காலங்களில் அதிகமாக விமர்சிக்கப்பட்டு வருகிறார். இதற்கு காரணம் அவரது அப்பா எஸ்ஏசி மற்றும் அம்மா ஷோபா சந்திரசேகர். பிரபல இயக்குநரான எஸ்ஏசி தன்னுடைய மகனை பிரபல நடிகராக்கும் முயற்சியில் அதிகமான பிரயத்தனங்களை மேற்கொண்டது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான்.

அப்பாவிடம் பேசாத விஜய்

அப்பாவிடம் பேசாத விஜய்

ஆனால் தன்னுடைய அப்பாவிடம் ஏற்பட்ட சில மனக்கசப்பு காரணமாக கடந்த சில ஆண்டுகளாகவே அவருடன் பேசுவதை தவிர்த்து வருகிறார் விஜய். அவரை சென்று பார்ப்பதையும் தவிர்த்து வருகிறார். இதனால் அவருடைய அம்மா ஷோபா சந்திரசேகரும் பாதிக்கப்பட்டு வருகிறார்.

எஸ்ஏசி பிறந்தநாள்

எஸ்ஏசி பிறந்தநாள்

சமீபத்தில் இதுகுறித்து எஸ்ஏசி அதிகமாக பேசி வருகிறார். மாதத்திற்கு ஒருமுறையாவது தன்னுடைய மகன் தன்னை பார்க்க வரவேண்டும் என்ற தனது ஏக்கத்தையும் சமீபத்திய பேட்டியில் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது பிறந்தநாள் கொண்டாடத்தில் அவர் ஈடுபட்டார்.

தனியாக கொண்டாட்டம்

தனியாக கொண்டாட்டம்

ஆனால் இதில் தன்னுடைய மனைவியுடன் அவர் கேக் ஊட்டி கொண்டாடிய புகைப்படங்களே இணையதளத்தில் வெளியாகின. தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு திருக்கடையூரில் ஆயுள் விருத்தி ஹோமமும் செய்தார். இதிலும் அவருடன் அவரது மனைவி மட்டுமே காணப்பட்டார். தன்னுடைய மகன், பேரப்பிள்ளைகள் இதில் கலந்துக் கொள்ளாத ஏக்கம் அவர்கள் முகத்தில் காணப்பட்டது.

எஸ்ஏசி விளக்கம்

எஸ்ஏசி விளக்கம்

இந்தப் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. இதிலாவது விஜய் கலந்துக் கொண்டிருக்க வேண்டும் என்ற கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இந்நிலையில் தன்னுடைய யாக பூஜைக்கு விஜய் வராதது குறித்து எஸ்ஏசி தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஐதராபாத் சூட்டிங்

ஐதராபாத் சூட்டிங்

கடந்த 2ம் தேதி ஐதராபாத்தில் வாரிசு படத்தின் சூட்டிங் இருந்ததாகவும் அதன் காரணமாக விஜய் 1ம் தேதியே ஐதராபாத் புறப்பட்டு சென்றுவிட்டதாகவும் அதனால்தான் தன்னுடைய பிறந்தநாள், யாகபூஜை உள்ளிட்ட நிகழ்வுகளில் விஜய்யால் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரசிகர்கள் கமெண்ட்

ரசிகர்கள் கமெண்ட்

தற்காலங்களில் எங்கு செல்வதென்றாலும் விமானப் பயணங்கள் அதை எளிதாக்கியுள்ளன. அதனால் தன்னுடைய தந்தையின் பிறந்தநாளை கொண்டாடிவிட்டு விஜய் ஐதராபாத் சென்றிருக்கலாம். அல்லது சூட்டிங்கை ஒருநாள் தள்ளி வைத்துவிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கலாம் என்பதே ரசிகர்களின் கமெண்ட்டாக காணப்படுகிறது.

விஜய் வெறுப்பு

விஜய் வெறுப்பு

ஒரு தந்தையை, தன்னுடைய வாழ்க்கையை சினிமா கேரியரை சிறப்பாக அமைத்து கொடுத்தவரை இந்த அளவிற்கு விஜய் வெறுக்க என்ன காரணம் இருக்க முடியும் என்பதே ரசிகர்களின் அடுத்த கேள்வியாக உள்ளது. குடிகார தந்தையையே மன்னிக்கும் சில மகன்கள் காணப்படும் நிலையில், ரசிகர்களுக்கு முன்னுதாரணமாக காணப்படும் விஜய்யின் இத்தகைய நடவடிக்கை அனைவரிடையேயும் கேள்விகளை எழுப்பி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X