twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் தந்தை பட யூனிட்டுக்கு தமிழக அரசு 'ஃபைன்'!

    By Sudha
    |

    SA Chandrasekhar
    காட்டை அசுத்தப்படுத்தியதாக நடிகர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி வரும் படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழக அரசின் வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

    சட்டப்படி குற்றம் என்ற படத்தை இயக்கி வருகிறார் எஸ்.ஏ.சந்திரசேகர். இப்படத்தில் சத்யராஜும், சீமானும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்றது.

    இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டதாகும். இருப்பினும் எப்படியோ அனுமதியை வாங்கி விட்டார் சந்திரசேகர். ஆனால் இதற்கு சுற்றுச்சூழலியாளர்கள் எதிர்ப்புக் குரல் கொடுக்கத் தொடங்கினர்.

    இந்த நிலையில் படப்பிடிப்பு நடந்த பகுதியில் குப்பைகளாக்கி அசுத்தப்படுத்தி பாழ்படுத்தி விட்டதாக கூறி படப்பிடிப்புக் குழுவினருக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது.

    இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறை அதிகாரி சதீஷ் கூறுகையில், படப்பிடிப்பு நடந்த பகுதியை நாங்கள் ஆய்வு செய்தோம். அப்போது படப்பிடிப்பு நடந்த இடங்களில் நிறைய குப்பைகளைப் போட்டு வைத்திருந்தனர். மேலும், அங்குள்ள குளத்திற்கு அருகில் உள்ள புதர்ப் பகுதிகளையும் பாழ்படுத்தியிருந்தனர். மேலும், சிலம்பாட்டக் காட்சிகளைப் படமாக்குவதற்காக அங்குள்ள இயற்கையான மூலிகைச்செடிகளை உடைத்து குச்சிகளை எடுத்துள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு ரூ. 15,000 அபராதம் விதிக்கப்பட்டது. அதை அவர்கள் கட்டி விட்டனர் என்றார்.

    இந்தப் படத்தை ஸ்டார் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படப்பிடிப்புக்காக சத்தியமங்கலம் வனப் பகுதிக்குட்பட்ட ஆசனூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தினர்.

    இதற்கிடையே, வனத்துறை மீது சிறப்பு அதிரடிப்படையினர் வேறு புகாரைக் கூறுகின்றனர். சமீபத்தில் நாங்கள் வனப்பகுதியை பாழ்படுத்தி விட்டதாக கூறி காட்டை விட்டு வெளியேறுமாறு வனத்துறை கூறியது. ஆனால் சினிமாப் படப்பிடிப்புக்கு மட்டும் தாராளமாக அனுமதிக்கிறார்கள். இது எந்த ஊர் நியாயம் என்று அவர்கள் குமுறுகின்றனர்.

    English summary
    Tamil Nadu forest department has slapped a fine on a film production company which shot in the Sathyamangalam forests, for littering the jungle areas. Actor Vijay's father, S A Chandrasekhar, had arrived along with his film crew in Sathyamangalam forests, a proposed tiger reserve, in the first week of January to shoot his come-back movie 'Sattapadi Kutram'. Sathyaraj and director Seeman playing the lead role. The forest department's decision to grant permission for film shooting in the sensitive Sathyamangalam forests, which is an emerging haven for tigers, had drawn the ire of environmentalists."We undertook an inspection of the forests and found the film crew had littered the forest areas and disturbed the shrubs near the pond," Sathyamangalam DFO N Sathish told. They also disturbed the natural vegetation to acquire sticks to shoot the silambattam scenes, the official said. Film production company Star Makers Movie Producers camped in Asanur and shot on the roads abutting the jungles for nearly a fortnight."We have slapped a fine of Rs 15,000 which they have paid," the DFO said.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X