Actor Vijay: தமிழ்நாட்டுக்கு பொக்கிஷம் கிடைக்கணும்.. விஜய் குறித்து பேசிய அவரது அப்பா எஸ்ஏசி!

சென்னை: நடிகர் விஜய் அடுத்தடுத்த தளங்களில் தன்னை இணைத்துவரும் நிலையில், நடிகராக இருந்து மிகப்பெரிய உயரத்தை தொட்டுள்ள அவர், அடுத்ததாக அரசியல் களத்தில் இறங்கியுள்ளார். தவெகவை கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்துள்ள அவர், அடுத்தடுத்து கட்சியை பலப்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்.

அடுத்ததாக கட்சியின் மாநாடு இன்னும் இரு தினங்களில் நடக்கவுள்ள நிலையில் அதற்கான அடுத்தடுத்த பணியினில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து விஜய் செயல்பட்டு வருகிறார். தற்போது நடித்துவரும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

vijay tvk party sac

நடிகர் விஜய்: நடிகர் விஜய் சிறுவனாக சினிமாவில் என்ட்ரி கொடுத்து தொடர்ந்து 40 ஆண்டுகளாக நடித்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாகவே பொதுவெளியில் அனைத்து தரப்பு மக்களையும் ரசிகர்களையும் சந்தித்து தன்னை சிறப்பாக வெளிப்படுததி வருகிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அரசியல் பிரவேசத்தை முறைப்படி அறிவித்தார். தொடர்ந்து தளபதி 69 படத்துடன் தான் சினிமாவில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

தவெக முதல் மாநாடு: இந்நிலையில், வரும் 27ம் தேதி கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிகவும் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டப்பணிகளில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஈடுபட்டு வருகிறார். இதையொட்டி அவரது தளபதி 69 படத்தின் சூட்டிங் கடந்த 5ம் தேதி பூஜையுடன் சென்னையில் துவக்கப்பட்டது. இதில் பாரம்பரிய லுக்கில் வேட்டை சட்டையுடன் காணப்பட்ட விஜய்யின் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. உடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் மற்றும் படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் ஆகியோரும் பங்கேற்றனர்.

எஸ்ஏசி பாராட்டு: இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விஜய்யின் அப்பாவும் பிரபல இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர், வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் தவெக மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். எங்க தளபதிக்கு நல்ல பேர் கிடைக்க வேண்டும் என்றும் கூறிய அவர், ஒரு பெரிய நிலைமைக்கு வரவேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் தமிழகத்திற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி வடசென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கொரட்டூர் பாபா கோயிலில் அன்னதானம் செய்ததையும் எஸ்ஏசி சுட்டிக் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.

கோயிலில் அன்னதானம்: தங்களின் அண்ணன் விஜய்க்காக, தளபதிக்காக இவர்கள் அனைவரும் இந்த விஷயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் எஸ்ஏசி பாராட்டியுள்ளார். முன்னதாக விஜய் மற்றும் அவரது தந்தை இடையில் சில மனக்கசப்புகள் இருந்த நிலையில், தன்னுடைய கட்சியை அறிவித்த சில வாரங்களிலேயே தன்னுடைய அம்மா மற்றும் அப்பா இருவரையும் அவர்களது வீட்டில் சென்று சந்தித்து நடிகர் விஜய் ஆசிர்வாதம் பெற்றிருந்தார். இதையடுத்து அடுத்தடுத்த விஜய்யின் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எஸ்ஏசி பங்கேற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X