விஜய் வீட்டுக்கு வரணும்...கண் கலங்கிய எஸ்ஏசி...வேண்டுகோள் வைக்கும் ரசிகர்கள்!
சென்னை : நடிகர் விஜய் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது தளபதி 66 படத்திற்காக ஐதராபாத்தில் சூட்டிங்கில் உள்ளார். இந்நிலையில் அவரது தந்தை விஜய் குறித்த சமீபத்திய பேட்டியில் கண்கலங்கிய வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தளபதி 66 படம்
நடிகர் விஜய் பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது தளபதி 66 படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ளார். இந்தப் படத்திற்காக அவர் ஐதராபாத்தில் நடைபெற்றுவரும் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். இந்தப் படத்தை வம்சி படிப்பள்ளி இயக்கி வருகிறார். குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகிவருகிறது.

லோகேஷ் படத்தில் விஜய்
தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் அவர் கமிட்டாகி நடித்து வருகிறார். அடுத்ததாக அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விக்ரம் படத்தின் ரிலீசை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தில் இணையவுள்ளார்.

தந்தையுடன் பிரச்சினை
இந்நிலையில், நடிகர் விஜய்க்கும் அவரது தந்தை எஸ்ஏசிக்கும் இடையில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. அவரது ரசிகர் மன்றத்தை அரசியல் கட்சியாக மாற்றும் எஸ்ஏசியின் முயற்சியில் இருந்தே இந்தப் பிரச்சினை தொடர்ந்து வருகிறது. இதையடுத்து விஜய் குறித்த பல விஷயங்களை எஸ்ஏசி தொடர்ந்து பேசி வருகிறார்.

விஜய்க்கு கோரிக்கை
இதனிடையே அவரது சமீபத்திய பேட்டியில் விஜய் குறித்து அவர் பேசும்போது மாதத்திற்கு ஒருமுறையாவது விஜய் தன்னையும் அவரது அம்மாவையும் பார்த்து நலம் விசாரிக்க வேண்டும் என்றும் அரை மணிநேரமாவது தங்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கண்கலங்கிய எஸ்ஏசி
இதுகுறித்து அவர் பேசும்போது அவர் மனமுடைந்து கண்கலங்கியதையும் அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது. இந்த விஷயம் சின்ன விஷயமாக தோன்றினாலும் இது தனக்கு மிகவும் பெரிய விஷயம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஒரு தந்தையாக தன்னுடைய மகனிடம் இந்தக் கோரிக்கையை அவர் வைத்துள்ளார்.

குடும்ப சென்டிமெண்ட்
தன்னுடைய படத்தில் குடும்ப சென்டிமெண்ட்டை மையமாக வைத்து படத்தில் நடித்துவரும் நடிகர் விஜய், அதை தன்னுடைய சொந்த வாழ்க்கையிலும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் தற்போதைய கோரிக்கையாக மாறியுள்ளது. விஜய் நன்றி உணர்ச்சியுடன் இருக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











