திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் தந்தையான பிரபல இயக்குநர்.. இரட்டைக் குழந்தைகளுடன் டபுள் சந்தோஷம்!
சென்னை: திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பிறகு பிரபல இயக்குநர் இரட்டை குழந்தைகளுக்கு அப்பாவாகியுள்ளார்.
பிரபல மலையாள இயக்குநர் சஜி சுரேந்திரன். இவர் கடந்த 2009-ம் ஆண்டு மலையாளத்தில்வெளியான 'இவ விவஹிதரயால்' என்கிற படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.
இதனை தொடர்ந்து ஹேப்பி ஹஸ்பண்ட்ஸ், ஃபோர் பிரண்ட்ஸ், குஞ்சலியன், ஷீ டாக்ஸி உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துபிரபலமானார்.

குழந்தை பாக்கியம் இல்லை
இயக்குனர் சஜி கடந்த 2005-ம் ஆண்டு சங்கீதா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு கடந்த 16 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்தது.

குழந்தை பிறந்துள்ளது
கடந்த ஆண்டு சங்கீதா கர்ப்பமானார். 16 ஆண்டுகளுக்குப் பிறகு வீட்டிற்கு வாரிசு வரப்போவதை எதிர்பார்த்து குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான சங்கீதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

இரட்டை ஆண் குழந்தைகள்
சஜி - சங்கீதா தம்பதிக்கு தற்போது இரட்டை குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து சமூக வலைதளத்தில் இயக்குனர் சஜி வெளியிட்டுள்ள பதிவில், "சில நேரங்களில் அற்புதங்கள் இரட்டிப்பாக வரும். இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடவுளுக்கு நன்றி" என தெரிவித்துள்ளார்.

குவியும் வாழ்த்து
திருமணமாகி 16 ஆண்டுகளுக்கு பின் குழந்தை பிறந்துள்ளதால், சஜி சுரேந்திரனுக்கும் சங்கீதாவுக்கும் சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











