Just In
- 45 min ago
சூப்பர் ஹீரோ ஆரி.. மின்னல் வேகத்துல போறாரே.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான் பாடல் ரிலீஸ்!
- 1 hr ago
தங்கச்சிலை போல ஜொலிக்கும் துல்கர் சல்மான் பட நடிகை!
- 1 hr ago
பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர்தானாமே..பாலாஜிக்கு அதுவும் இல்லையாம்? தீயாய் பரவும் தகவல்!
- 1 hr ago
தீவிர வில்வித்தை பயிற்சி... ஆண்ட்ரியாவின் அசத்தலான பிக்ஸ்!
Don't Miss!
- News
மீண்டும் அதிகரிக்கும் கொரோனா... 5 நாட்களில்... 1500 ரூம்கள் கொண்ட மருத்துவமனையை கட்டி அசத்திய சீனா
- Lifestyle
பெண்களை கலவியில் திருப்திப்படுத்துவதற்கு இத மட்டும் கரெக்ட்டா பண்ணுனா போதுமாம்... சரியா பண்ணுங்க...!
- Sports
கொரோனா வைரஸ் பாஸிடிவ்.. ஆனாலும் போட்டியில் ஆட சாய்னாவுக்கு அனுமதி.. செம ட்விஸ்ட்!
- Automobiles
நிஜமாகும் சூர்யாவின் சூரரைப் போற்று கதை!! பயன்பாட்டிற்கு வந்தது இந்தியாவின் முதல் ஏர் டாக்ஸி சர்வீஸ்!
- Finance
லாக்டவுனில் 4 மடங்கு வளர்ச்சி.. டாடா பங்ககுளை திட்டம்போட்டு வாங்கிய ராகேஷ் ஜூன்ஜூன்வாலா..!
- Education
உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை ரெடி! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
கல்வான் மோதலுக்கு எதிர்ப்பு.. சீனப் பொருட்களை கொட்டி தீ வைத்துக் கொளுத்திய பிரபல இயக்குனர்!
சென்னை: தனது அலுவலகத்தில் இருந்த சீன பொருட்களை எரித்து பிரபல இயக்குனர், தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்.
பிரபு நடித்த சார்லி சாப்ளின், சத்யராஜ் நடித்த கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன், மகாநடிகன் உட்பட சில படங்களை இயக்கியவர், ஷக்தி சிதம்பரம்.
இப்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பேய் மாமா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.
யார் கண் பட்டதோ தெரியவில்லை.. பாலிவுட்டில் அடுத்தடுத்த ஷாக்.. கார் விபத்தில் சிக்கிய கோவிந்தா மகன்

சீனப் பொருட்கள்
இவர் தனது அலுவலகத்தில் இருந்த சீனப் பொருட்களைத் தீயிட்டு எரித்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். சீனா தரப்பிலும் 35 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

சாக்ஷி அகர்வால்
இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சில நடிகர், நடிகைகள் சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலியில் இருந்து விலகியுள்ளனர்.
இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகைகள் சாக்ஷி அகர்வால், சனம் ஷெட்டி ஆகியோர், டிக் டாக் மற்றும் சீன ஆப்களின் கணக்குகளை டெலிட் செய்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

ஷக்தி சிதம்பரம்
இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தனது அலுவலகத்தில் உள்ள சீன பொருட்களை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்து, தமிழ் மண்ணைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாகக் கொன்ற சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இதுவரை உபயோகித்த அனைத்து சீனப் பொருட்களையும் தீயிட்டு, கொளுத்த வேண்டும்.

தீயிட்டு எரித்தேன்
இனி வரும் காலங்களில் சீன பொருட்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்று சபதம் ஏற்க வேண்டும். அதுதான் உயிர்நீத்த தியாகிகளுக்கு நிஜமான நினைவஞ்சலியாக இருக்கும். முன்னுதராணமாக இருக்க வேண்டும் என்று என் அலுவலகத்தில் உள்ள சீன பொருட்களை, வாசலில் கொட்டி தீயிட்டு எரித்தேன். இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் இருக்கும்' என்று கூறியுள்ளார்.