twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கல்வான் மோதலுக்கு எதிர்ப்பு.. சீனப் பொருட்களை கொட்டி தீ வைத்துக் கொளுத்திய பிரபல இயக்குனர்!

    By
    |

    சென்னை: தனது அலுவலகத்தில் இருந்த சீன பொருட்களை எரித்து பிரபல இயக்குனர், தனது எதிர்ப்பை காட்டியுள்ளார்.

    Recommended Video

    நாடு தான் முக்கியம்... TikTok-ல் இருந்து வெளியேறிய பிக்பாஸ் நடிகை

    பிரபு நடித்த சார்லி சாப்ளின், சத்யராஜ் நடித்த கோவை பிரதர்ஸ், இங்கிலீஸ்காரன், மகாநடிகன் உட்பட சில படங்களை இயக்கியவர், ஷக்தி சிதம்பரம்.

    இப்போது யோகி பாபு ஹீரோவாக நடிக்கும் பேய் மாமா என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார்.

    யார் கண் பட்டதோ தெரியவில்லை.. பாலிவுட்டில் அடுத்தடுத்த ஷாக்.. கார் விபத்தில் சிக்கிய கோவிந்தா மகன்யார் கண் பட்டதோ தெரியவில்லை.. பாலிவுட்டில் அடுத்தடுத்த ஷாக்.. கார் விபத்தில் சிக்கிய கோவிந்தா மகன்

    சீனப் பொருட்கள்

    சீனப் பொருட்கள்

    இவர் தனது அலுவலகத்தில் இருந்த சீனப் பொருட்களைத் தீயிட்டு எரித்து எதிர்ப்பைக் காட்டியுள்ளார். லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த சில நாட்களுக்கு முன், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். சீனா தரப்பிலும் 35 க்கும் மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன.

    சாக்‌ஷி அகர்வால்

    சாக்‌ஷி அகர்வால்

    இதனால் எல்லைப் பகுதியில் பதற்றம் உருவாகியுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் சீன பொருட்களை புறக்கணிக்கக் கோரி போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சில நடிகர், நடிகைகள் சீனாவைச் சேர்ந்த டிக் டாக் செயலியில் இருந்து விலகியுள்ளனர்.
    இசையமைப்பாளர் ஜிப்ரான், நடிகைகள் சாக்‌ஷி அகர்வால், சனம் ஷெட்டி ஆகியோர், டிக் டாக் மற்றும் சீன ஆப்களின் கணக்குகளை டெலிட் செய்துவிட்டதாக அறிவித்துள்ளனர்.

    ஷக்தி சிதம்பரம்

    ஷக்தி சிதம்பரம்

    இயக்குனர் ஷக்தி சிதம்பரம் தனது அலுவலகத்தில் உள்ள சீன பொருட்களை எரித்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, "லடாக் பகுதியில் அத்துமீறி நுழைந்து, தமிழ் மண்ணைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனி உட்பட 20 இந்திய ராணுவ வீரர்களை கொடூரமாகக் கொன்ற சீன அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், இதுவரை உபயோகித்த அனைத்து சீனப் பொருட்களையும் தீயிட்டு, கொளுத்த வேண்டும்.

    தீயிட்டு எரித்தேன்

    தீயிட்டு எரித்தேன்

    இனி வரும் காலங்களில் சீன பொருட்களை உபயோகப்படுத்த மாட்டோம் என்று சபதம் ஏற்க வேண்டும். அதுதான் உயிர்நீத்த தியாகிகளுக்கு நிஜமான நினைவஞ்சலியாக இருக்கும். முன்னுதராணமாக இருக்க வேண்டும் என்று என் அலுவலகத்தில் உள்ள சீன பொருட்களை, வாசலில் கொட்டி தீயிட்டு எரித்தேன். இதன் மதிப்பு சுமார் 60 ஆயிரம் இருக்கும்' என்று கூறியுள்ளார்.

    English summary
    Director Sakthi Chidambaram has burnt chinese products in his office
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X