ஹார்ன் அடிப்பான்.. டபுள் மீனிங்கா.. எனக்கு பாட்டு ஹிட் ஆகனும்.. ஜாலியோ ஜிம்கானா இயக்குநர் பேச்சு!
சென்னை: தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் பாடல் ஹிட் ஆனால்தான் ரசிகர்களுக்கு படத்தின் மீது ஈர்ப்பே வருகின்றது. அண்மையில் ரிலீஸ் ஆன விஜய்யின் கோட் படத்தின் வசூல் கணிசமான அளவு குறைய, அதன் பாடல்கள் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இல்லை எனக் கூறப்பட்டது. காரணம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாடல் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. படத்தின் ரிலீஸ்க்கு முன்னர் பாடல்கள் ரிலீஸ் செய்யப்படுவதால் ரசிகர்கள் பாடல்களை வைத்து படத்தினை மதிப்பிட்டுவிடுகின்றார்கள். அப்படி இருக்கும்போது இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் பாடல்களைக் கொடுக்க இசையமைப்பாளர்களை நெருக்கடிக்கு ஆளாக்குகின்றனர்.

இப்படி இருக்கும்போது நடிகர் பிரபுதேவா, நடிகை மடோனா செபாஸ்டின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ஜாலியோ ஜிம்கானா. இந்தப் படத்தினை சக்தி சிதம்பரம் இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன்னர், இங்கிலீஷ்காரன், கோவை பிரதர்ஸ் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியால அடிப்பான் என்ற பாடலை அவரே எழுதியுள்ளார்.

இந்தப் படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசை அமைத்துள்ளார். போலீஸ்காரனை கட்டிக்கிட்டா லத்தியால அடிப்பான் என்ற பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு நேற்று முன்தினம் அதாவது, அக்டோபர் 25ஆம் தேதி ரிலீஸ் செய்தது. இந்தப் பாடல் முழுவதும் ஒரு பெண் தனக்கு வரப்போகும் மாப்பிள்ளை எவ்வாறு இருக்கவேண்டும் இருக்ககூடாது என்பதை மைய்யப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

டபுள் மீனிங்: இதில் லத்தியால அடிப்பான், ஹாரன் அடிப்பான், மடிச்சு வைப்பான், முட்டி போட சொல்லுவான், தண்டால் எடுப்பான் என அனைத்துமே டபுள் மீனிங்காக உள்ளது என இணையவாசிகள் பாடல் குறித்து கமெண்ட் செய்தனர். பாடலை ஆண்ட்ரியா பாடியுள்ளார். பாடல் டபுள் மீனிங் அர்த்தத்தில் இருப்பதாலே இணையத்தில் வேகமாக பரவியது. இப்படியான நிலையில், பாடலை எழுதிய இயக்குநர் சக்தி சிதம்பரம் இது தொடர்பாக தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

பாடல் செம ஹிட்: அதாவது, அவர் பேசியதாவது, " பாடல் செம ஹிட் ஆகிடுச்சு. சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்கள் குறித்து எனக்கு கவலை இல்லை. பாடல் விரைவில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துவிடும். ரசிகர்கள் பாடலை விரும்பிக் கேட்கின்றார்கள். பாடல் டபுள் மீனிங்காக உள்ளது, ட்ரிபிள் மீனிங்காக உள்ளது என கமெண்ட் சொல்வது குறித்து எனக்கு எந்தக் கவலையும் இல்லை. பாடல் ஹிட் ஆகிடுச்சு எனக்கு அதுபோதும்.
அனுபவிக்கணும்: இதற்கு முன்னர், மச்சான் படத்தில் இடம் பெற்ற 'நண்பா என்ன மறந்துட்டியா' பாடல் எழுதினேன், அந்தப் பாடல் நல்ல வரவேற்பைப் பெற்றது. நீண்ட இடைவேளைக்கு பிறகு மற்றொரு பாடலை எழுதியிருக்கேன். போலீஸ்காரனை கட்டிகிட்டா லத்திய வச்சு அடிப்பான். டாக்டரை கட்டிகிட்ட ஊசியால குத்துவான் என்ற வரிகளை நீங்கள் எப்படி வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம். ஒரு பாடலை அனுபவிக்கணும் ஆராயக்கூடாது" எனக் கூறியுள்ளார். இவரது இந்த பதில் பலரது கவனத்தினை ஈர்த்தது மட்டும் இல்லாமல், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











