இணைய குற்றங்களை மையப்படுத்திய கதையாம்.. அதர்வாவுடன் மீண்டும் இணையும் இயக்குனர்!

By

சென்னை: சாம் ஆண்டன் இயக்கும் அடுத்த படத்தில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக அறிமுகமான டார்லிங் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சாம் ஆண்டன்.

இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து, ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற படத்தை இயக்கினார்.

ஹன்சிகா மோத்வானி

ஹன்சிகா மோத்வானி

இதையடுத்து அதர்வா, ஹன்சிகா மோத்வானி நடித்த 100 படத்தை இயக்கினார். இதில் ராதாரவி, யோகிபாபு, ராஜ் ஐயப்பா உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியானது. இதையடுத்து யோகிபாபு, சார்லி உட்பட பலர் நடித்த கூர்கா படத்தை இயக்கினார்.

பிரமாண்ட ஆக்‌ஷன்

பிரமாண்ட ஆக்‌ஷன்

இப்போது அதர்வா நடிக்கும் படத்தை மீண்டும் இயக்க இருக்கிறார். இது பிரமாண்ட ஆக்‌ஷன் படம் என்று கூறப்படுகிறது. மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாறா படத்தை தயாரித்த புரமோத் பிலிம்ஸ் சார்பில், சுருதி நல்லாப்பா தயாரிக்கிறார். தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பபை மையப்படுத்திய ஆக்ஷன் த்ரில்லர் படமாக இது உருவாகிறதாம்.

சிறப்பு பயிற்சி

சிறப்பு பயிற்சி

இணையவழி குற்றங்கள்தான் இப்படத்தின் பின்னணி கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது. பல புதுமையான ஆக்ஷன் காட்சிகள் படத்தில் இடம்பெறுகிறது. இப்படத்தின் காட்சிகளுக்காக சிறப்பு பயிற்சி மேற்கொள்ள இருக்கிறார் அதர்வா. ஜிப்ரான் இசை அமைக்கிறார். கிருஷ்ணன் வெங்கட் ஒளிப்பதிவு செய்கிறார்

காமெடிக்கு முக்கியத்துவம்

காமெடிக்கு முக்கியத்துவம்

இப்படத்தில் ஆக்ஷனோடு காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு படமாவதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. இதில் நடிக்கும் நடிகர் நடிகைகள் உள்ளிட்ட முழு விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X