தலைவா உங்கள நம்பித்தான் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுகிட்டேன்... அதர்வா பட இயக்குனர் கலகல பதிவு!

சென்னை : இசையமைப்பாளர் ஜி வி பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான டார்லிங் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானவர் சாம் ஆண்டன்.

லவ்வர் பாயாக இருந்த அதர்வாவை ஆக்ஷன் ஹீரோவாக மாறியுள்ளார். 100 படத்திற்கு பிறகு மீண்டும் அதர்வாவுடன் இணைந்து பக்கா ஆக்சன் திரைப் படத்தை இயக்கிவருகிறார் சாம் ஆண்டன்.

தற்போது ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக் கொண்டதோடு கலகலப்பான பதிவு ஒன்றையும் போட்டுள்ளது வைரலாகி வருகிறது.

ஜி வி பிரகாஷ் குமார் ஹீரோவாக

ஜி வி பிரகாஷ் குமார் ஹீரோவாக

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குனர்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருபவர் இயக்குனர் சாம் ஆண்டன் . இதுவரை இயக்கிய அனைத்து திரைப்படங்களும் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் அடித்து உள்ளது. ஜி வி பிரகாஷ் குமார் ஹீரோவாக அறிமுகமான டார்லிங் படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார் .

யோகி பாபு ஹீரோவாக

யோகி பாபு ஹீரோவாக

அதைத் தொடர்ந்து மீண்டும் ஜிவி பிரகாஷ் நடிப்பில் எனக்கு இன்னொரு பேர் இருக்கு என்ற கலகலப்பான காமெடி படத்தையும் இயக்கி அதிலும் வெற்றி கண்டார். அதர்வா நடிப்பில் 100 மற்றும் யோகிபாபுவின் கூர்கா என இரண்டு ஹிட்டுகளை ஒரே ஆண்டில் அசால்டாக கொடுத்து செம கல்லா கட்டியவர். முன்னணி காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கும் யோகி பாபு ஹீரோவாக நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற முதல் படம் கூர்கா ஆகும்.

ஒரே ஷாட்டில்

ஒரே ஷாட்டில்

சாக்லேட் பாயாக வலம் வந்த அதர்வாவை 100 படத்தில் போலீஸ் அதிகாரியாக காட்டி ஆக்சன் ஹீரோவாக அவதாரம் எடுக்க வைத்தவர். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதையடுத்து மீண்டும் அதர்வாவின் கூட்டணியில் இணைந்து டார்க் வெப் ஜானரில் த்ரில்லர் கதை களத்தில் பக்கா ஆக்சன் படத்தை சாம் ஆண்டன் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு கடந்த பிப்ரவரியில் தொடங்கப்பட்டு ஹைதராபாத்தில் சண்டை காட்சிகள் முழுவதும் எடுக்கப்பட்டுள்ளது. சுமார் மூன்று நிமிடம் வரும் சண்டைக் காட்சியை ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்டதாக புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகின.

ரஸ்யா-ல ஹாஃப் கிரெளண்ட்

ரஸ்யா-ல ஹாஃப் கிரெளண்ட்

படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் சற்று நகைச்சுவையுடன் உடன் பேசும் சாம் ஆண்டன் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக் கொண்டு.. அந்த புகைப்படத்துடன் ரஸ்ய அதிபரின் புகைப்படத்தையும் பதிவிட்டு .. "தலைவா உன்ன நம்பிட்டேன்.. பாத்து பண்ணு.. ரஸ்யா-ல ஹாஃப் கிரெளண்ட் கொடுத்தாக் கூட சந்தோசமா வாங்கிப்பேன். என கலப்பாக போட்டுள்ள பதிவு அனைவரையும் கவர்ந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X