இந்தியன் படத்துல என்னை விரட்டினாங்க.. இன்னைக்கு விதி வேற மாதிரி இருக்கு.. சமுத்திரக்கனி பேட்டி!
சென்னை: தமிழ் திரையுலகில் சமூக அக்கறை கொண்ட இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் சமுத்திரக்கனி. இவர் படங்களில் சமூக அக்கறை கொண்ட கருத்துக்கள் அனல் தெறிக்கும். சமுதாயத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், சாதி, மத மோதல் என அனைத்தையும் தைரியமான பேசக்கூடிய நடிகரான சமுத்திரக்கனி, இந்தியன் 2 படத்தில் நடித்தது குறித்து பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
2003ஆம் ஆண்டு வெளியான உன்னை சரணடைந்தேன் என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமா இயக்குநராக அறிமுகம் ஆனார் சமுத்திரக்கனி. அந்த படத்தில் எஸ் பி பி சரண் பல நடித்திருந்தார்கள். இந்த படத்தைத் தொடர்ந்து, விஜயகாந்தை வைத்து நிறைந்த மனசு, நாடோடிகள், போராளி, நிமிர்ந்து நில், அப்பா, தொண்டன், நாடோடிகள் 2, வினோதய சித்தம் தொண்டன், பல படங்களை இயக்கியிருக்கிறார். இவர்கள் இயக்கிய படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

இயக்குநர் சமுத்திரக்கனி: அதன்பின் சசிக்குமார் இயக்கிய சுப்பிரமணியபுரத்தில் நடித்து நடிகராக மாறினார். அதைத்தொடர்ந்து இவர் ஈசன், சாட்டை, நீர் பறவை, வேலையில்லா பட்டதாரி, ரஜினி முருகன், விசாரணை, காலா, வடசென்னை, ஆர்ஆர்ஆர், துணிவு, தலைக்கூத்தல் போன்ற பல திரைப்படங்களில் நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
மிகுந்த மகிழ்ச்சி: தற்போது சமுத்திரக்கனி யாவரும் வல்லவரே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன்காக யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள சமுத்திரக்கனி,மனம் திறந்து பல விஷயத்தை பேசி உள்ளார். அதில், இந்தியன் 2 படத்தில் நான் நடித்துள்ளேன். அந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஷங்கர் கதை எழுதும் போதே தீர்மானித்துவிட்டதாக என்னிடம் கூறிய போது நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.
விரட்டி விட்டார்: ஒரு கேரக்டரில் நடிக்க வேண்டிய நடிகர் என்பவர் தானாகவே அதில் செலக்ட் ஆகி விடுவார், நாம் எந்தவித முயற்சியும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்றார். இதே ஷங்கர் இந்தியன் படத்தை எடுக்கும்போது நான் ஜூனியர் ஆர்டிஸ்ட் ஆக நடிக்க வரிசையில் நின்றேன். அப்போது என்னுடைய பெயரை கூட எழுதாமல் விரட்டி விட்டு விட்டார்கள். ஆனால் அதே ஷங்கர் இன்று என்னை 'இந்தியன் 2' படத்திற்காக என்னை கூப்பிட்டு உள்ளார், எனக்காக ஒரு கேரக்டரை உருவாக்கி உள்ளார், அதுதான் விதி, என்று சமுத்திரக்கனி அந்த பேட்டியில் கூறினார்.


Click it and Unblock the Notifications











