ஊழலை வெளுத்துக் கட்ட வரும் “வேலன் எட்டுத்திக்கும்”.. சமுத்திரக்கனி இயக்கத்தில் நானி, அமலா பால்!
சமுத்திரக்கனியின் புதிய படத்திற்கு வேலன் எட்டுத்திக்கும் எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சென்னை: சமுத்திரக்கனி இயக்கும் புதிய படத்திற்கு வேலன் எட்டுத்திக்கும் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் சரத்குமார், நானி, அமலாபால் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
நாடோடிகள், நிமிர்ந்து நில், அப்பா உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தந்தவர் சமுத்திரக்கனி. சமீபகாலமாக நடிப்பில் பிசியாக இருந்த சமுத்திரக்கனியின் கவனம் தற்போது மீண்டும் இயக்கம் பக்கம் திரும்பி இருக்கிறது.
நாடோடிகள் இரண்டாம் பாகத்தை எடுத்து வரும் இவர், அடுத்ததாக சரத்குமார், நானி நாயகர்களாக நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு, 'வேலன் எட்டுத்திக்கும்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

மீண்டும் அமலா பால்
இப்படத்தில் அமலாபால் நாயகியாக நடிக்கிறார். நாசர் பஞ்சுசுப்பு, சித்ரா, லட்சுமனன், சமுத்திரக்கனி,சிவபாலாஜி, பார்வதி நாயர், ராகினி திவேதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜிவி பிரகாஷ்
இப்படத்தை நாகன் பிக்சர்ஸ் கே.நாகன் பிள்ளை தயாரிக்கிறார். இசை ஜி.வி.பிரகாஷ். ஊழலுக்காக எதிராக நாயகன் போராடுவது தான் கதைக்களம்.

லஞ்சம் என்ற சாத்தான்
இன்று ஊழல் ,லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப் பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப் படுகிறான். இப்படி உள்ள சூழ்நிலையை மாற்றப் போராடும் நாயகன் அரவிந்த், தனது முயற்சியில் ஜெயித்தானா என்பதுதான் கதை.

வித்தியாசமான வேடத்தில் சரத்குமார்
ஆக்சன் மற்றும் பரபரப்பான காட்சிகளுடன் இப்படம் தயாராவதாகவும், படத்தில் சரத்குமாருக்கு பாராட்டுகளைப் பெற்றுத் தரும் வித்தியாசமான வேடம் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications











