சாய் பல்லவி ஸ்லீவ்லெஸ் போட மாட்டாங்க.. அர்ஜுன் ரெட்டி படத்தில் அவங்க ஹீரோயின் ஆகல.. இயக்குநர் ஓபன்!

ஐதராபாத்: நடிகை சாய் பல்லவி தொடர்ந்து பத்து ஆண்டுகளை கடந்து சினிமாவில் இருந்த போதிலும் தேர்ந்தெடுத்த கதைகளிலேயே இவர் நடித்து வருகிறார். பிரேமம் படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த இவர் மலர் டீச்சராக ஏராளமான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டிருந்தார்.
தொடர்ந்து சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஆண்டில் அமரன் படம் மூலம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்த சாய் பல்லவி நடிப்பில் அடுத்ததாக தண்டேல் படம் ரிலீசாகவுள்ளது. இதன் அடுத்தடுத்த பிரமோஷன்கள் சிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன.
thandel movie sai pallavi sandeep reddy vanga
நடிகை சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவி அடுத்தடுத்த படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்து வருகிறார். தன்னுடைய முதல் படமான பிரேமம் படத்திலேயே மலர் டீச்சராக ஏராளமான ரசிகர்களின் கனவுகளில் இடம்பிடித்தார். தொடர்ந்து பல படங்கள் இவரது கேரியர் பெஸ்ட்டாக, ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரைட்டாக அமைந்துள்ளன. இதனிடையே, கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் படம் மிகப்பெரிய அளவில் அவருக்கு வரவேற்பையும் விமர்சனங்களையும் பெற்றுக் கொடுத்தது.
தண்டேல் படம்: இந்நிலையில் அடுத்ததாக நாக சைத்தன்யாவுடன் இணைந்து சாய் பல்லவி நடிப்பில் தண்டேல் படம் வரும் 7ம் தேதி திரையரங்குகளில ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் ரிலீஸுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். நாக சைத்தன்யா - சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள இந்த படம் மிகப்பெரிய கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சந்தீப் ரெட்டி வாங்கா பங்கேறறு பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்துள்ளார்.
சாய் பல்லவிக்கு பாராட்டு: சாய் பல்லவி குறித்த தன்னுடைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட சந்தீப் ரெட்டி, முன்னதாக அர்ஜுன் ரெட்டி படத்திலேயே சாய் பல்லவியை நாயகியாக்க தான் முயன்றதாகவும் ஆனால் இது குறித்து co ordinator ஒருவரிடம் தான் பேசியபோது, தன்னுடைய கதையை கேட்ட அவர் அந்த பெண் ஸ்லீவ்லெஸ்ஸே போடாது என்றும் இந்தக் கதைக்கு அவர் செட்டாக மாட்டார் என்றும் கூறி விட்டதாகவும் அதனால் தான் சாய் பல்லவியை நாயகியாக்கும் தன்னுடைய முடிவை மாற்றிக் கொண்டதாகவும் சந்தீப் ரெட்டி வங்கா தெரிவித்துள்ளார்.
10 ஆண்டு திரைப்பயணம்: சாய்பல்லவி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக படங்களில் நடித்து வரும் நிலையிலும் கவர்ச்சி இல்லாத நடிப்பை கொடுத்து வருவதாகவும் இதில் உறுதியுடன் இருந்து வருவதாகவும் சந்தீப் ரெட்டி வங்கா மேலும் சாய் பல்லவிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இதை கேட்டு சாய் பல்லவி மகிழ்ச்சியுடன் பார்வையாளர் பக்கத்தில் இருந்து கொண்டு தன்னுடைய நன்றியை பகிர்ந்து கொண்டதையும் இந்த நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. தண்டேல் படத்தில் நாக சைத்தன்யாவுடன் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள நிலையில் இந்த படம் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் நாக சைத்தன்யா -சாய் பல்லவி ஜோடி இணைந்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X