Animal movie: மாஸ் ஹிட்டடித்த அனிமல் படம்... இரண்டாவது பாகத்திற்கு திட்டமிடும் இயக்குநர்!

சென்னை: நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர் கூட்டணியில் உருவாகி கடந்த 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான படம் அனிமல்.

அர்ஜூன் ரெட்டி படத்தை இயக்கியிருந்த சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது அனிமல் படம்.

Director Sandeep Reddy vangaa going to direct Animal 2 movie

கலவையான மற்றும் கடுமையான விமர்சனங்களை பெற்ற போதிலும் அனிமல் படம் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது.

அனிமல் படம்: நடிகர்கள் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, சுரேஷ் ஓபராய், திரிப்தி டிம்ரி உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள அனிமல் படம் கடந்த 1ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகி வசூல் சாதனை படைத்து வருகிறது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் இந்தப் படம் இதுவரை சர்வதேச அளவில் 850 கோடி ரூபாய்களுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளது. பான் இந்தியா படமாக வெளியான இந்தப் படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது.

தூக்கலான வன்முறை: படத்தில் பல காட்சிகள் வன்முறை தூக்கலாக இருப்பதாக கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது. தளபதி 68 படத்தின் ஒளிப்பதிவாளர் சித்தார்த்தா நுனியும் இந்தப் படம் தன்னை அதிகமான கோபத்தில் ஆழ்த்தியதாகவும் ஆணாதிக்கத்தை நியாயப்படுத்துவதாகவும் தன்னுடைய சமூக வலைதளத்தில் குறிப்பிட்டிருந்தார். சட்டத்திற்கு எதிரான வன்முறைகள், திருமணம் என்ற பெயரில் நடக்கும் பாலியல் வன்முறை என பல விஷமக் கருத்துக்கள் படத்தில் உள்ளதாகவும் அவர் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

அனிமல் 2 படம்: இதனிடையே இந்தப் படத்தின் 2வது பாகம் அனிமல் பார்க் என்ற பெயரில் உருவாகவுள்ளதாக படத்தின் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் 2025ம் ஆண்டில்தான் நடக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அடுத்த ஆண்டு அக்டோபரில் பிரபாஸ் நடிப்பில் புதிய படத்தின் சூட்டிங்கை துவங்கவுள்ள அவர், அதை தொடர்ந்து அனிமல் 2 படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: இந்த இரு படங்களை தொடர்ந்து அல்லு அர்ஜூன் நடிப்பிலும் அவர் படமியக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த மூன்று படங்களையும அனிமல் படத்தை தயாரித்த பூஷன் குமார் டி-சீரிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியான நிலையில் முன்னதாக இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக படக்குழுவினர் சென்னை வந்திருந்தனர்.

அதிரடி இயக்குநர்: தன்னுடைய முதல் படத்திலேயே வன்முறை காட்சிகளை அதிகமாக பயன்படுத்தி அதிரடி இயக்குநராக மாறியிருந்தார். விஜய் தேவரகொண்டா லீட் கேரக்டரில் நடித்திருந்த அர்ஜூன் ரெட்டி படம் 5 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது. இதையடுத்து இந்தப் படம் இந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட்டடித்தது. இந்நிலையில் தற்போது அனிமல் படத்தையும் சிறப்பான வெற்றிப்படமாக்கியுள்ளார் சந்தீப் ரெட்டி வங்கா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X