பெண் இயக்குனர் திடீர் கவலைக்கிடம்?வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை..பரபரப்பில் திரையுலகம்!

By

சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பெண் திரைப்பட இயக்குனருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பிரபல வெயிட்லிப்ஃடிங் வீராங்கனை, கர்ணம் மல்லேஸ்வரியின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

ஆந்திராவை சேர்ந்த மல்லேஸ்வரி, ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை.

கோனா வெங்கட்

கோனா வெங்கட்

கடந்த இரண்டாயிரமாவது ஆண்டில், சிட்னி ஒலிம்பிக்கில் கலந்துகொண்ட மல்லேஸ்வரி, வெண்கலப் பதக்கம் வென்றார். அந்த ஒலிம்பிக்கில் இந்தியா வென்ற ஒரே பதக்கம் அதுதான். அவரது வாழ்க்கை கதையை திரைக்கதையாக்கி இருக்கிறார், பிரபல தெலுங்கு ஸ்க்ரிப்ட் டைரட்டரும் தயாரிப்பாளருமான கோனா வெங்கட்.

சஞ்சனா ரெட்டி

சஞ்சனா ரெட்டி

படம் உருவாக்குவதற்கான உரிமையை கர்ணம் மல்லேஸ்வரியிடம் இருந்து அவர் பெற்றுள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படம் உருவாகிறது. எம்.வி.வி சினிமா சார்பில் எம்.வி.வி.சத்யநாராயணா தயாரிக்கிறார். பெண் இயக்குனர் சஞ்சனா ரெட்டி இயக்குகிறார். இவர், ராஜூகாடு என்ற தெலுங்கு படத்தை இயக்கியவர்.

மல்லேஸ்வரி யார்?

மல்லேஸ்வரி யார்?

கர்ணம் மல்லேஸ்வரியின் பிறந்த நாளை முன்னிட்டு கடந்த 1 ஆம் தேதி, படக்குழு இந்த தகவலை அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தது. இந்தப் படத்தின் போஸ்டரை வெளியிட்டிருந்த படக்குழு, அதில், 'தேசத்தை உயர்த்திய ஒரு பெண்ணின் பயணம்' என்று குறிப்பிட்டுள்ளனது. கர்ணம் மல்லேஸ்வரி கேரக்டரில் நடிக்கப் போவது யார் என்பது இன்னும் முடிவாகவில்லை.

கவலைக்கிடம்

கவலைக்கிடம்

இதற்கிடையே இதன் இயக்குனர் சஞ்சனா ரெட்டி ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ள அவருக்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் உடல் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் செயற்கை சுவாசக்கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

திடீரென மயங்கினார்

திடீரென மயங்கினார்

இந்நிலையில், சஞ்சனா ரெட்டியின் உடல் நிலை குறித்து கவலைப்பட ஏதுமில்லை என்று கூறியுள்ளார், கோனா வெங்கட். அவர் கூறும்போது, கடந்த சில நாட்களுக்கு முன் அவர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 3 நாட்களாக திரவ உணவு அவருக்கு கொடுக்கப்பட்டு வருகிறது. இன்னும் இரண்டு, மூன்று நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X