கும்பமேளா மோனாலிசாவுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா இயக்குநர்? வீட்டுக்கு வந்து அழ காரணம் என்ன?

மும்பை: பாலிவுட் திரையுலக வட்டாரத்தில் தற்போது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் விஷயம் என்றால் அது, இயக்குநர் சனோஜ் மிஸ்ரா கைது குறித்துதான். உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள, ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். இப்படியான நிலையில் கும்பமேளா மோனாலிசா வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார், குடும்பத்தினரை சந்தித்து அழுதுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற மகா கும்பமேளாவில் ருத்ராட்ச மாலை விற்றுக் கொண்டு இருந்தவர் மோனாலிசா போஸ்லே. இவரது கண்கள் பலரையும் வசீகரிக்க செய்யும் அளவிற்கு இருந்ததால், கும்பமேளாவில் கலந்து கொண்ட பலரும் இவரைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார்கள். இதனால் இவர் பிரபலமானார். கும்பமேளாவுக்கு சென்ற பக்தர்களில் குறிப்பிட்ட அளவிலானவர்கள், மோனலிசாவை ருத்ராட்ச மாலைகளை விற்க விடாமல், புகைப்படம் எடுக்கவும், செல்ஃபி எடுக்கவும் அழைத்துக் கொண்டே இருந்துள்ளனர். இதனால் மோனாலிசாவை அவரது தந்தை வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துள்ளார். இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவியது.

இப்படியான நிலையில் மோனலிசாவுக்கு தான் இயக்கும் புதிய படத்தில் நடிகையாக நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி அவரது வீட்டிற்கே சென்றார், இயக்குநர் சனோஜ் மிஸ்ரா. தங்களது குடும்ப வறுமையை போக்க, கடவுளாக ஏற்படுத்திக் கொடுத்த வாய்ப்பு இதுதான் என எண்ணினார். மகா கும்பமேளா முடிந்தவுடன் இந்த வாய்ப்பு வந்துள்ளது என்றால், கடவுள் கொடுக்கும் வாய்ப்பு என நினைத்து, படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார், மோனாலிசா.

Director Sanoj Mishra Who Arrested in Rape Case He Misbehave With Kumbha Mela Monalisa

பாலியல் வன்கொடுமை: இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகளும் புகைப்படங்களும், வீடியோக்களும் வந்தது. மோனாலிசாவும் இயக்குநருடன் விமானத்தில் செல்வது, பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற புகைப்படங்களும் வெளியானது. இப்படியான நிலையில் சனோஜ் மிஸ்ரா, பாலியல் புகார் ஒன்றில் கைது செய்யப்பட்டுள்ளார். டிக் டாக் பிரபலத்தை சினிமாவில் நடிகையாக நடிக்க வைக்கிறேன் எனக் கூறி, அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார். மேலும், இயக்குநரால், அந்த டிக் டாக் பிரபலம் சுமார் மூன்று முறை கருக்கலைப்பு செய்ததாகவும் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

Director Sanoj Mishra Who Arrested in Rape Case He Misbehave With Kumbha Mela Monalisa

விசாரணை: இயக்குநரைக் கைது செய்த காவல்துறை அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. குறிப்பாக, அவர் இது போல எத்தனை பெண்களை ஏமாற்றினார். அதில் பாலியல் வன்கொடுமை செய்தது எத்தனை பெண்களுக்கு? எத்தனை பெண்களை வீடியோ எடுத்து மிரட்டினார் என்றெல்லாம் விசாரணை நீள்கிறது என கூறப்படுகிறது.

Director Sanoj Mishra Who Arrested in Rape Case He Misbehave With Kumbha Mela Monalisa

கண்ணீர்: தனக்கு சினிமா வாய்ப்பு கொடுப்பதாக கூறிய இயக்குநரை காவல்துறை கைது செய்துவிட்டது. இது மோனலிசாவுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இப்படியான நிலையில், மோனலிசா போஸ்லே, தற்போது அவரது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டார். குடும்பத்தாரிடம் நடந்ததைக் கூறி அழுதுள்ளார். இப்படியான நிலையில் காவல்துறை தரப்பில் இருந்து மோனாலிசா போஸ்லேவிடவும் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக மோனாலிசாவையும் பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. சினிமாவில் நடிக்கச் சென்ற மோனாலிசா தற்போது அவரது வீட்டிற்கு திரும்பி வந்துவிட்டதால், பலரும் பரபரப்பாக பேசி வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X