கும்பமேளா மோனலிசா தப்பித்தார்.. 3 முறை கருக்கலைப்பு.. சினிமா வாய்ப்பு தந்த இயக்குநர் கைது!

மும்பை: உத்தரப்பிரேதச கும்பமேளாவில் ருத்ராட்ச மாலைகள் விற்பனை செய்து பிரபலம் ஆனவர் மோனலிசா போஸ்லே. பின்னாளில், இவருக்கு பாலிவுட்டில் படத்தில் நடிக்கும் வாய்ப்பை தருவதாக தயாரிப்பாளரும், இயக்குநருமான சனோஜ் மிஸ்ரா அறிவித்திருந்தார். இந்நிலையில், மாேனலிசாவிற்கு பட வாய்ப்பு தந்த இயக்குநரை போலீசார் கைதிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதுவும் அவர் எப்படிப்பட்டவர் என தெரிந்ததும் ரசிகர்களை அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

உத்திரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளாவில் லட்சக்கணக்கான மக்கள் வந்து சென்றனர். 45 நாட்கள் நடந்த இந்த விழாவில் திரை பிரபலங்கள் பலரும் வந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி சென்றனர். கும்பமேளாவில் அலைமோதும் கூட்டத்திற்கு நடுவில் மத்திய பிரதேசத்தை சேர்ந்த மோனலிசா போஸ்லே என்ற 17 வயது பெண்ணின் முகம் அதிக பார்வையாளர்களை ஈர்த்தது. ருத்ராட்ச மாலைகளை விற்று வந்த அவர் ஒரே இரவில் ஃபேமஸ் ஆனார். ருத்ராட்ச மாலை விற்கும் நேரத்தில் அவரது அழகான முக தோற்றம் அங்கு வருபவர்களை காட்டிலும் மீடியாவை ஈர்த்தது.

director-sanoj-mishra-who-gave-kumbh-mela-monalisa-a-chance-in-cinema-arrested-in-sexual-case

வேதனை அடைந்த மோனலிசா: அதனைத்தொடர்ந்து அவரை எந்நேரமும் யூடியூபர்கள், கேமராமேன்கள் அவரை வட்டமடித்து காெண்டிருந்தனர். அவர் பேசும்போது பொன்சிரிப்புமாய் வீடியோக்களும் வைரல் ஆனது. இந்தியாவில் குக்கிராமத்தை சேர்ந்த பெண் இந்த அளவிற்கு ஃபேமஸ் ஆவார் என்று அவரும் நினைத்திருக்க மாட்டார். மனம் வருந்தி மோனலிசா சொன்ன விசயம் பலரது மனதை முள் தைத்தது போல் பதிந்தன. எல்லோரும் என் அழகையும் சிரிப்பையும் புகைப்படம் எடுக்க வருகிறார்களே தவிர.. யாரும் ருத்ராட்ச மாலை வாங்க வரவில்லை. ஃபேமஸ் ஆனாலும், வறுமை அப்படியே இருக்கிறது என தெரிவித்தார்.

படத்தில் நடிக்க வாய்ப்பு: இதைத்தொடர்ந்து தனது செல்வாக்கை பயன்படுத்திக்கொள்ளும் வகையில யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கிய மோனலிசா அதில் அவர் செய்யும் குறும்புகளை வீடியோவாக வெளியிட்டார். பின்னர், மீடியாவில் அவர் அளித்த பேட்டியில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் செல்வீர்களா என்ற கேள்விக்கு வாய்ப்பு இருந்தால் பார்க்கலாம் என தெரிவித்தார்.அவர் கூறியது போலவே, மோனலிசாவிற்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கொடுக்க தயாராக இருப்பதாக இயக்குனர் சனோஜ் மிஸ்ரா தெரிவித்தார். டைரி ஆப் மணிப்பூர் என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பை தருவதாகவும் அதற்கு முன்பணமாக ரூ.25 லட்சத்தை மோனலிசாவிடம் வழங்கினார்.

director-sanoj-mishra-who-gave-kumbh-mela-monalisa-a-chance-in-cinema-arrested-in-sexual-case

இயக்குநர் கைது: இந்நிலையில், மோனலிசாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்த சனோஜ் மிஸ்ரா பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண் ஒருவருக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி அப்பெண்ணை ஏமாற்றி பாலியல் ரீதியாக துன்புறுத்தி வந்துள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் படி சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார். மேலும்,, டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்க தடை விதித்திருக்கிறது.

28 வயது பெண் புகார்: உத்தரப்பிரதேச மாநிலம் ஜான்சியை சேர்ந்த 28 வயது பெண் ஒருவர் டிக்டாக் மற்றும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக ரீல்ஸ் வீடியோக்களை பதிவிட்டு ஃபேமஸ் ஆகியுள்ளார். அவருக்கும் ரசிகர்களின் ஆதரவும் இருக்கிறது. கடந்த 2020ஆம் ஆண்டில் 28 வயதான பெண்ணின் வீடியோவை பார்த்த சனோஜ் மிஸ்ரா படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக கூறியுள்ளாராம். 45 வயதான சனோஜ் மிஸ்ரா சபல புத்தியுடன் அந்த பெண்ணின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 2021ஆம் ஆண்டு ரயில்வே நிலையத்திற்கு வர கட்டாயப்படுத்தியுள்ளார். அதுமட்டும் இல்லாமல், அப்பெண் வராவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என கூறி மிரட்டியதாகவும் தெரிகிறது.

director-sanoj-mishra-who-gave-kumbh-mela-monalisa-a-chance-in-cinema-arrested-in-sexual-case

பாலியல் ரீதியாக கொடுமை: பின்னர் வசதியான ரிசார்ட்டிற்கு அப்பெண்ணை அழைத்து சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு மட்டும் இல்லாமல் வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை தொல்லை அளித்து வந்துள்ளாராம். இதன் பிறகு அப்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி ஆசை வார்த்தை காட்டி மும்பை நகரில் லிவிங் உறவில் வாழவும் அப்பெண்ணை கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்திருக்கிறார். மேலும், 3 முறை கருக்கலைப்பும் செய்துள்ளதாக அப்பெண் மன வேதனையுடன் தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே, சனோஜ் மிஸ்ரா பாதிக்கப்பட்ட பெண்ணை மிரட்டி வெளியை விரட்டியுள்ளாராம். மோனலிசாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாக அறிவித்த பின்னர் தான் தெரிந்தது நான் ஏமாற்றப்பட்டுள்ளேன் என பாதிக்கப்பட்ட இளம்பெண் தெரிவித்திருக்கிறார். இதன் பின்னரே சனோஜ் மிஸ்ரா கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X