கமல்ஹாசனின் காதல்.. அதுக்காக எதை வேண்டுமானதாலும் செய்வார்.. உண்மையை வெளிப்படுத்திய சந்தானபாரதி
சென்னை : நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். படம் வரும் ஜூன் மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இயக்குநர் சந்தான பாரதியும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் கமலின் நீண்டநாள் நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் படம்
நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா, நரேன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ளது விக்ரம் படம். இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். வரும் ஜூன் 3ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

சிறப்பான வரவேற்பு
படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல்கள் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி ரசிர்களிடையே மிகச்சிறந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங். படம் இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இன்னும் சில தினங்களில் ரிலீசாக உள்ளது.

கேன்சில் ட்ரெயிலர் வெளியீடு
நடிகர் கமல்ஹாசன் 4 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் நடித்துள்ளார். மேலும் சமீபத்தில் அவர் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டதுடன் இந்தப் படத்தின் ட்ரெயிலரும் விழாவில் திரையிடப்பட்டது. ட்ரெயிலருக்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. இது வெளிநாடுகளில் படத்திற்கான மிகச்சிறந்த பிரமோஷனாக அமைந்துள்ளது.

சிறப்பான பிரமோஷன்கள்
இந்தியாவிலும் ஒவ்வொரு மாநிலத்திலும் படக்குழுவினர் சிறப்பான பிரமோஷன்களை மேற்கொண்டு வருகின்றனர். படம் குறித்தும் அடுத்தடுத்த அப்டேட்கள் குறித்தும் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. கமல், லோகேஷ், விஜய் சேதுபதி உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்ந்து பல பேட்டிகளையும் அளித்து வருகின்றனர்.

இயக்குநர் சந்தான பாரதி
படத்தில் இயக்குநர் சந்தானபாரதியும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். இவர் கமலின் நீண்ட கால அதாவது 50 ஆண்டுகால நண்பர் என்பதும் கமலை வைத்து குணா மற்றும் மகாநதி ஆகிய படங்களை இயக்கியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற நடிகர்களையும் வைத்து சந்தான பாரதி சிறப்பான பல படங்களை கொடுத்துள்ளார்.

கமல் குறித்து சந்தான பாரதி
தற்போது நடிப்பில் கவனம் செலுத்திவரும் சந்தான பாரதி, கமல் குறித்த பல விஷயங்களை சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துக் கொண்டுள்ளார். கமலுக்கு அவருடைய படமும் காட்சிகளும்தான் மிகவும் முக்கியம் என்றும் அவர் பணத்தை பற்றியெல்லாம் கவலை கொள்ள மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

கமலின் காதல்
மேலும் கமலுக்கு சினிமாவின் மீது அந்த அளவிற்கு காதல் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான எதை வேண்டுமானாலும் செய்வார் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள விக்ரம் படம் மிகவும் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளுடன் உருவாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











