குணா மாதிரி ஒரு படத்தில் நடிக்க வேண்டும்.. ரஜினியின் ஆசை இதுதானாம்.. சந்தானபாரதி ஷேரிங்ஸ்

சென்னை: ரஜினிகாந்த் தற்போது வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். அதனை ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கிவருகிறார். அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் ரஜினிகாந்த். 70 வயதை தாண்டியும் ரஜினிகாந்த் பிஸியாகவும், சுறுசுறுப்பாகவும் இருந்துவருவதை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்திருக்கின்றனர். இந்தச் சூழலில் ரஜினியின் ஆசை குறித்து இயக்குநர் சந்தானபாரதி ஒரு பேட்டியில் பகிர்ந்திருக்கிறார்.

இந்திய சினிமாவின் அடையாளங்களில் ஒருவரான ரஜினிகாந்த் கடைசியாக ஜெயிலர் படத்தில் நடித்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருந்த அந்தப் படம் மெகா ஹிட்டானது. கடந்த சில வருடங்களாகவே ஹிட்டுக்கு ஏங்கிக்கொண்டிருந்த ரஜினிக்கு ஜெயிலர் நிவாரண மருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 700 கோடி ரூபாய்வரை படம் உலகம் முழுவதும் வசூலித்தது.

Director Santhana Bharathi Talks about Rajinikanth Unknown Side

வேட்டையன்: ஜெயிலர் படத்துக்கு பிறகு அவர் த.செ.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார். ஜெய்பீம் படத்தை இயக்கிய இயக்குநர் என்பதால் ஞானவேல் இந்தப் படத்தில் ரஜினியை வைத்து எந்த மாதிரியான விஷயத்தை பேசப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதேசமயம் ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான டைட்டில் டீசரை பார்க்கையில் ஒருவேளை படம் கமர்ஷியல் பாதையில் பயணிக்குமோ என்ற சந்தேகத்தை ரசிகர்கள் எழுப்பிவருகின்றனர்.

நட்சத்திர பட்டாளம்: இந்தப் படத்தில் ரஜினிகாந்த்துடன் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ரித்திகா சிங், துஷாரா விஜயன், மஞ்ச் வாரியர், ராணா டகுபதி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஃபகத் பாசில் ரஜினிக்கு மகனாகவும், ராணா டகுபதிதான் படத்துக்கு வில்லன் என்றும் கூறப்படுகிறது. படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

தலைவர் 171: இந்தப் படத்தை முடித்துவிட்டு அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 171ஆவது படத்தில் நடிக்கிறார். இப்படி ரஜினிகாந்த் இப்போதும் படுபிஸியாக இருப்பதை பார்த்து ஒட்டுமொத்த திரையுலகும் ஆச்சரியம்தான் படுகிறது. இதற்கிடையே கெஸ்ட் ரோலில் ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் திரைப்படம் சில் நாட்களுக்கு முன்பு வெளியாகி தோல்வியை சந்தித்தது. லோகேஷ் கனகராஜ் படத்தை முடித்துவிட்டு சௌந்தர்யா இயக்கத்தில் அவர் நடிக்கலாம் என்றும் ஒரு பேச்சு ஓடுகிறது. கவிஞர் வைரமுத்து ரஜினிக்கு, 'மீசை வைத்த குழந்தையப்பா' என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார். அதற்கேற்றபடி குழந்தைபோல் படு சுறுசுறுப்பாக இருக்கிறார் ரஜினி.

ரஜினியின் ஆசை: ரஜினிகாந்த் கமர்ஷியல் பாதையை தேர்ந்தெடுத்தவர். ஆரம்பத்தில் சில ஆர்ட் சினிமாக்களில் நடித்தாலும் போகப்போக கமர்ஷியல் அவருக்கு செட் ஆகிவிட்டது. இந்நிலையில் குணா படத்தின் இயக்குநர் சந்தானபாரதி சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "குணா படத்தை ரஜினிகாந்த் பார்த்து கமல் சாரின் நடிப்பையும், கதைக்களத்தையும் ரொம்பவே பாராட்டினார். பிறகு என்னிடம் ஏன் குணா மாதிரி ஒரு திரைப்படத்தில் நான்லாம் நடிக்கமாட்டேனா என கேட்டார். உண்மையில் சொல்லப்போனால் குணா ஜானரிலும் ரஜினிகாந்த் நடிக்க ஆசைப்பட்டார் என்பது உண்மை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X