இருட்டு அறையில் முரட்டு குத்து 2ஆம் பாகம் கற்பனை கதை தான்-டைரக்டர் சந்தோஷ்.பி.குமார்
சென்னை: இயக்குநர் சந்தோஷ்.பி.குமார் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 திரைப்படத்தை இயக்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதற்கு முக்கிய காரணம், தமிழ் சினிமா மட்டுமல்ல, உலக சினிமாவிலும் இளைஞர்களை கவரும் வகையில், அதிக அளவில் அடல்ட் காமெடி படங்கள் வெளிவருகின்றன. இதனை உத்தேசித்தே இயக்குநர் சந்தேஷ்.பி.குமார், இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தை இயக்கு முடிவெடுத்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
சந்தோஷ்.பி.ஜெயகுமார், ஹர ஹர மகாதேவகி எனும் அடல்ட் காமெடி படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். அந்தப் படம் பலரையும் முகம் சுளிக்க வைத்திருந்தாலும் இன்றைய இளைஞர்களை கவர்ந்ததால், அந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.

அதற்கு பின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில், இரு படங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டார் சந்தோஷ். அதுதான் கஜினிகாந்த் மற்றும் இருட்டு அறையில் முரட்டு குத்து. கஜினிகாந்த் ஃபேமிலி ட்ராமாவாக எடுத்திருந்தார். அந்தப் படம் மக்களிடையே பெரிதாக எடுபடவில்லை.
கவுதம், கார்த்திக், யாஷிகா ஆனந்த், வைபவி, சாரா, கருணாகரன் ஆகியோரை வைத்து மீண்டும் ஒரு அடல்ட் காமெடி படத்தை எடுத்தார் சந்தோஷ். இந்த முறையும் படம் இளம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. படத்தில் முகம் சுளிக்க வைக்கும் இரட்டை அர்த்த வசன காட்சிகள், மூன்றாம் பாலினத்தவரையும் ஓரினச் சேர்க்கையாளரையும் கிண்டல் செய்யும் வசனங்கள் என படத்தில் முகம் சுளிக்க வைக்கும் விசயங்கள் தாராளம்.
ஆனாலும் பாக்ஸ் ஆபிஸில் படம் நல்ல வசூல். இவரின் கஜினிகாந்த் மட்டும் வெற்றி பெறாததற்கு காரணம், மற்ற இரண்டு படங்களைப் போல் இது அடல்ட் காமெடி இல்லை என்பதாகும். தற்போது தமிழ் சினிமா மட்டுமல்ல, உலக சினிமாக்களிலும் இளைஞர்கள் மட்டும் பார்க்க கூடிய வகையில், அதிக அடல்ட் காமெடி படங்கள் அவ்வப்போது வெளி வருகின்றன. இதைப் புரிந்துகொண்டு ட்ரெண்டில் இருக்கும் இயக்குநர்கள் அடுத்தவர் மனதை புண் படுத்தாமல் படம் எடுப்பது நன்று.
தற்போது சந்தோஷ்.பி.ஜெயகுமார் அரவிந்த் சாமியை வைத்து புலனாய்வு என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் நடிகர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும், இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க கற்பனை கதையாக இருக்கும் என்றும், படம் இருட்டு அறையில் முரட்டு குத்து தொடர்ச்சி இல்லை என்றும் இது வேறு மாதிரியாக இருக்கும் என்றும் இயக்குநர் சந்தோஷ் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











