சந்திப்போமா மீண்டும் சந்திப்போமா.. அஜித் ஷாலினி புகைப்படத்தை வெளியிட்டு தூது விட்ட இயக்குநர்

சென்னை: அமர்க்களம் படத்தின் இயக்குநர் அந்தப் படத்தின்போது எடுக்கப்பட்ட அஜித் மற்றும் ஷாலினியின் புகைப்படத்தை பகிர்ந்திருப்பது ட்ரெண்டாகியுள்ளது.

அமராவதி படம் மூலம் அறிமுகமானவர் அஜித்குமார். சினிமாவில் எந்த பின்புலமும் இல்லாமல் வந்த அஜித்துக்கு ஆரம்பத்தில் சரியான படங்கள் அமையவில்லை. இதனையடுத்து தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்த அஜித்துக்கு ஆசை படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றுத்தந்தது. அதன் பிறகு வாலி, காதல் கோட்டை, காதல் மன்னன் என வரிசையாக ஹிட் படங்களை கொடுத்தார் அஜித்.

விபத்தை சந்தித்த அஜித்

விபத்தை சந்தித்த அஜித்

இப்படி வரிசையாக ஹிட் படங்களை கொடுத்துக்கொண்டிருந்தாலும் ஒருபக்கம் தனது தீராத ஆசையான பைக் ரேஸிலும் கவனம் செலுத்திவந்தார் அஜித். இதனால் அவர் சினிமாவில் நிலைப்பாரா இல்லையா என்ற கேள்வியும் பலரிடமும் எழுந்தது. அதுமட்டுமின்றி பைக் ரேஸ் உள்ளிட்டவைகளால் அஜித் விபத்தையும் சந்தித்துவந்தார். அப்படி ஒரு விபத்தில் சிக்கி சிகிச்சையில் இருந்தபோதுதான் அவருக்கான 25ஆவது படம் அமைந்தது.

அஜித்தின் 25ஆவது படம் அமர்க்களம்

அஜித்தின் 25ஆவது படம் அமர்க்களம்

அஜித்தின் 25ஆவது படமாக அமைந்தது அமர்க்களம். அந்தப் படத்தை இயக்கியவர் ஏற்கனவே அஜித்தை வைத்து காதல் மன்னன் என்ற மெகா ஹிட்டை இயக்கிய சரண். சிகிச்சையிலிருந்து மீண்டு வந்த அஜித் அமர்க்களம் படத்தில் நடித்தார். அவருடன் ஷாலினி, ரகுவரன் உள்ளிட்டோரும் நடித்தனர். அதுவரை பக்கா கமர்ஷியல் படம் அஜித்துக்கு கிடைக்காமல் இருந்த சூழலில் அமர்க்களம் படம் அந்தக் குறையை தீர்த்துவைத்தது.

அஜித், ஷாலினி காதல் டூ கல்யாணம்

அஜித், ஷாலினி காதல் டூ கல்யாணம்

இந்தப் படத்தில் நடித்தபோது அஜித்துக்கும், ஷாலினிக்கும் காதல் ஏற்பட்டது. இதனையடுத்து இருவீட்டார் சம்மததுத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனோஷ்கா, ஆத்விக் என்ற இரு குழந்தைகள் இருக்கின்றனர். இன்றுவரை கோலிவுட்டின் சிறந்த ஜோடிகளாக அஜித்தும், ஷாலினியும் திகழ்ந்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சரண் பகிர்ந்த புகைப்படம்

இயக்குநர் சரண் பகிர்ந்த புகைப்படம்

இந்நிலையில் காதல் மன்னன், அமர்க்களம், அட்டகாசம், அசல் என அஜித்தை வைத்து நான்கு படங்களை இயக்கிய சரண் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் அந்தப் புகைப்படமானது அமர்க்களம் படத்தின் கடைசி நாள் ஷூட்டின்போது எடுக்கப்பட்டது ஆகும். அதில் சரண், அஜித், ஷாலினி என மூன்று பேரும் இருக்கின்றனர். இந்தப் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சரண், 'பிரிகிறோம் மீண்டும் சந்திப்போமா' நொடிகள் என குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X