Ajith - Shalini - கையில் வெட்டுப்பட்டார் காதலில் கட்டுப்பட்டார்.. அஜித் - ஷாலினி பற்றி இயக்குநர் சரண் ஷேரிங்ஸ்

சென்னை: Saran (சரண்) அமர்க்களம் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் ஷாலினி இருக்கும் புகைப்படத்தை சரண் பகிர்ந்திருக்கிறார்.

Director Saran Talks about And Shalini Love Story

சரண் இயக்கத்தில் அமர்க்களம் படத்தில் அஜித்தும், ஷாலினியும் இணைந்து நடித்தனர். அந்தப் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதனையடுத்து இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அனௌஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் இருக்கின்றனர். கோலிவுட்டின் ஃபேவரைட் ஜோடிகளில் அஜித்தும், ஷாலினியும் இருக்கிறார்கள்.

பதறிய அஜித்குமார்: அமர்க்களம் படத்தில் கத்தியை வைத்து ஷாலினியை அஜித் மிரட்டுவது போன்று ஒரு காட்சி இருக்கும். அந்தக் காட்சியில் நடித்துக்கொண்டிருக்கும்போது உண்மையாகவே கத்தி ஷாலினியின் கையை கீறிவிட்டது. இதனால் பதறிப்போன அஜித்குமார் உடனே முதலுதவி செய்தார். அன்றைய தின ஷூட்டிங் முடிந்த பிறகு பொக்கே அனுப்பி நலம் விசாரித்தார் அஜித்.

சீக்கிரம் ஷூட்டிங்க முடிங்க சரண்: அதனைத் தொடர்ந்து ஒருமுறை சரண், ஷாலினி, அஜித் மூன்று பேரும் அமர்ந்திருக்க, 'சரண் சீக்கிரம் ஷூட்டிங்க முடிச்சிடுங்க இல்லைனா நான் ஷாலினிய லவ் பண்ணிடுவேன் போல' என போட்டு உடைத்திருக்கிறார் அஜித். அப்போதுதான் அஜித்துக்குள் காதல் இருப்பதை ஷாலினி லேசாக உணர்ந்திருக்கிறார்.

காதலை சொன்ன அஜித்: தொடர்ந்து ஷூட்டிங் போய்க்கொண்டிருந்தபோது ஒருகட்டத்தில் ஷாலினியிடம் அஜித் காதலை சொல்லிவிட்டார். உள்ளுக்குள் அஜித் மீது ஷாலினிக்கு ஆசை இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தனது அப்பாவிடம் பேச சொன்னார் ஷாலினி. அதேசமயம் அஜித் பேசுவதற்கு முன்பாகவே ஷாலினியே தனது தந்தையிடம் பேசியிருந்தார். அதனையடுத்து அஜித்தும் நேரடியாக ஷாலினி தந்தையிடம் பேச அவரும் ஒத்துக்கொண்டார். இதனையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2000ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

Director Saran Talks about And Shalini Love Story

முதல் நாள் ஷூட்டிங்: இந்நிலையில் அமர்க்களம் இயக்குநர் சரண் தனது ட்விட்டர் பக்கத்தில், "அமர்க்களம்- ஷாலினி அவர்களுடன் அவரது முதல் நாள் படப்பிடிப்பில் முதல் ஷாட் பற்றி விவரித்த போது...! இதிலிருந்து மூன்றாவது நாள் ஏ.கே அவர்களுடன் படப்பிடிப்பில் இணைந்தார்,கையில் வெட்டுப்பட்டார்,காதலில் கட்டுப்பட்டார்" என குறிப்பிட்டு ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்தப் புகைப்படம் தற்போது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X